இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரான கே.எல் ராகுல் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 86 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட காயமும் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரின் பாதியில் விலகினார். அதன் பிறகு கடந்த பல மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத அவருக்கு தற்போது மீண்டும் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யாருக்கு பிளேயிங் லெவனில் இடம் :
அதே வேளையில் கே.எல் ராகுல் காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த இளம் வீரரான சர்பராஸ் கான் மூன்று போட்டியிலும் மூன்று அரைசதம் அடித்து அசத்தியதால் அவருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக இந்த தொடரில் அவர்கள் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கே.எல் ராகுலின் இடம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோகித் கூறுகையில் : கே.எல் ராகுல் உடைய திறமை என்ன என்பது எங்களுக்கு தெரியும். உலகிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே தங்கள் வாழ்வில் சுமூகமான நிலையில் இருக்கும். மற்றவர்களுக்கு மேடும் பள்ளமும் நிச்சயம் இருந்துள்ளது. அந்த வகையில் கே.எல் ராகுலுக்கும் நாங்கள் தெளிவான செய்தியை கூறியுள்ளோம்.
அதாவது இனிவரும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டும் அதுதான் எங்களுக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் 80 ரன்கள் அடித்தார், அதை வைத்து அவரது திறமையை நாங்கள் கண்டு கொள்ள முடியும், ஆனாலும் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வங்கதேச தொடரில் ஜாஹீர் கான் மற்றும் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின்
இதற்கு காரணம் யாதெனில் : இந்திய அணியில் தற்போது பலவீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவ்வேளையில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஒரு வீரரால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும் என்பதை மறைமுகமாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இருப்பினும் கே.எல் ராகுல் தான் வங்கதேச அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.



