ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் – பியூஷ் சாவ்லா நம்பிக்கை

Piyush-Chawla
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அறிவித்திருந்தனர். அவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.

கோலி மற்றும் ரோஹித் ஆகியோரது இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் :

அதோடு தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 35 வயதான விராட் கோலி நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்தார். இருப்பினும் வயது மூப்பு காரணமாக அவர்களால் இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

- Advertisement -

அதன் பின்னர் நிச்சயம் அவர்கள் ஓய்வை அறிவித்து இந்திய அணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் இருவருக்குமான சரியான மாற்று விரரை தேர்வு செய்வதற்கான வேலைகள் தற்போதே நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி இந்திய அணியில் அவர்கள் இருவரது இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

முன்னாள் வீரர்கள் பலரும் இந்த கேள்விக்கு பதில் அளித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை நிரப்பப்போகும் இரண்டு இளம் வீரர்கள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை நிரப்புவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் சுப்மன் கில்லிடம் நல்ல நுட்பம் இருக்கிறது. அவர் எப்பொழுது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்ம் அவுட் ஆனாலும் மீண்டும் வலுவாக கம்பேக் கொடுக்கும் திறனை வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் அஷ்வின் கிட்ட அந்த தனி டேலன்ட் இருக்கு.. அவருக்கு எதிரா விளையாடுவது கஷ்டம் – உஸ்மான் கவாஜா

அதோடு சமீபத்தில் காயத்தில் சிக்கி இருந்ததால் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அணியில் நீடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவரிடம் இருக்கும் திறமைக்கு அவர் அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வார். எனவே அவர்கள் இருவரும் தான் என்னை பொறுத்தவரை எதிர்காலத்தில் நம்பிக்கை வீரர்களாக இருப்பார்கள் என பியூஷ் சாவ்லா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement