சேவாக், மெக்கல்லம் ஆல் டைம் சாதனைகளை.. உடைத்து ரோஹித் – ஜெய்ஸ்வால் படைக்க உள்ள புதிய சாதனைகள்

Rohit and Jaiswal
- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அதில் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் சவால் விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் 2012க்குப்பின் இந்தியா தங்களது சொந்த ஊரில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அந்த வரிசையில் வங்கதேச அணியையும் இந்தியா தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் படைக்க உள்ள சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஹிட்மேன் ரோஹித் சர்மா:

முதலில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் 84 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அந்த வரிசையில் வங்கதேச தொடரில் இன்னும் 7 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனைகள் உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார். இதற்கு முன் அதிரடி மன்னனாக அறியப்படும் வீரேந்திர சேவாக் 103 போட்டிகளில் 90 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

மறுபுறம் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மா 59 போட்டியிலேயே 84 சிக்சர்கள் அடித்துள்ளார். எனவே வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கி சேவாக்கின் இந்த சாதனையை ரோகித் சர்மா படைக்க பிரகாச வாய்ப்புள்ளது. அந்த பட்டியல்:
1. வீரேந்திர சேவாக்: 90
2. ரோகித் சர்மா: 84*
3. எம்எஸ் தோனி: 78
4. சச்சின் டெண்டுல்கர்: 69
5. ரவிந்திர ஜடேஜா: 64*

- Advertisement -

இளம் புயல் ஜெய்ஸ்வால்:

அவரைப் போலவே 2024 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த இங்கிலாந்து தொடரில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டதை மறக்க முடியாது. அந்த வகையில் அதிரடியாக விளையாடும் ஜெய்ஸ்வால் 2024ஆம் ஆண்டு இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: அவங்க இருப்பதே இந்தியாவின் அதிர்ஷ்டம்.. என்னோட டார்கெட் இது தான்.. புதிய கோச் மோர்கல் பேட்டி

எனவே வங்கதேச தொடரில் இன்னும் 8 சிக்ஸர்களை அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற நியூஸிலாந்தின் மெக்கல்லம் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைப்பார். அந்த பட்டியல்:
1. ப்ரெண்டன் மெக்கல்லம்: 33 (2014)
2. பென் ஸ்டோக்ஸ்: 26 (2022)
3. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 26* (2024)
4. ஆடம் கில்கிறிஸ்ட்: 22 (2005)
5. வீரேந்திர சேவாக்: 22 (2008)

Advertisement