எங்க போனாலும் எங்களுக்குன்னே இந்தியர்கள் இதே குறியோட வராங்க.. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா

Usman Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் இப்போதே உதவுகிறது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது.

எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் இருக்கிறது. மறுபுறம் சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகளுக்கு இம்முறை எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

குறியா இருக்காங்க:

இந்நிலையில் எங்கே விளையாடினாலும் எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று குறியுடன் இந்தியா இருப்பதாக உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலக கிரிக்கெட்டில் பல வருடங்களாக ஆஸ்திரேலியா டாமினேட் செய்த அணியாக பெயரைக் கொண்டுள்ளது”

“ஆனால் இந்தியர்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதை இந்தியர்கள் விரும்புகின்றனர். சமீப காலங்களில் இந்தியாவும் ஐபிஎல் தொடரும் வளர்ந்துள்ளது உங்களுக்கு தெரியும். அதே போலவே இந்தியாவுக்கு எதிராக செயல்பட ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றனர்”

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா:

“எனவே அந்தத் தொடர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். முன்னதாக வரலாற்றில் இந்திய அணிக்கு பல மறக்க முடியாத தோல்விகளை ஆஸ்திரேலியா கொடுத்துள்ளது. குறிப்பாக 2003 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா படுதோல்வியை பரிசளித்தது. அதே போல 36க்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா பெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தோல்வியை கொடுத்தது.

இதையும் படிங்க: முஷீர் கானுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. திறமையால் கலக்கும் அண்ணன் – தம்பி

மேலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எந்த போட்டியாக இருந்தாலும் அதில் வெல்ல வேண்டும் என்பதே இந்திய அணியின் லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா தோற்கடித்து இந்தியா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement