ரிஷப் பண்ட் கிரேட் பேட்ஸ்மேனாக எல்லா தகுதியும் இருக்கு.. அதுக்கு இதையும் செய்யனும்.. கங்குலி பாராட்டு

Sourav Ganguly
- Advertisement -

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2017 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அப்போதிலிருந்து கடந்த 7 வருடங்களில் அவர் 33 டெஸ்ட், 30 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2271 ரன்களை குவித்துள்ள அவர் ஜாம்பவான் எம்எஸ் தோனியையே மிஞ்சும் அளவுக்கு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் 89* ரன்கள் குவித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் மாபெரும் சாதனை படைத்துள்ளார். அதே போல காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடரில் அரை சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கிரேட் பேட்ஸ்மேன்:

ஆனால் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை அசத்தவில்லை. குறிப்பாக 30 ஒருநாள் போட்டிகளில் வெறும் 865 ரன்களை குவித்துள்ள அவர் 68 டி20 போட்டிகளில் வெறும் 1065 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல் இதுவரை அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்தவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான பேட்ஸ்மேன் வருவார் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு சமமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

டெஸ்ட் மட்டும் போதாது:

“ரிஷப் பண்ட்டை இந்தியாவின் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக நான் கருதுவேன். எனவே அவர் மீண்டும் விளையாடுவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார். இதே போல அவர் தொடர்ந்து விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேனாகவும் வருவார்”

இதையும் படிங்க: வங்கதேசம் டஃப் சவால் கொடுப்பாங்க.. ஆனா இந்த காரணத்தால் இந்தியாவை ஜெயிக்க முடியாது.. கங்குலி ஓப்பன்டாக்

“என்னை பொறுத்த வரை அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் முன்னேற வேண்டும். அதே சமயம் கொண்டுள்ள திறமைக்கு கண்டிப்பாக அவர் சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று நான் உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய ரிஷப் பண்ட் அடுத்ததாக வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement