ஆகஸ்ட் 31 ஃபேப் 4 பிறந்த தினம்.. உண்மையான நியூஸிலாந்து ஜாம்பவான் மார்ட்டின் க்ரோ கணிப்பு

Martin Crowe
- Advertisement -

இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஃபேப் 4 என்றழைக்கப்படுகிறார்கள். அதாவது நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த 4 பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி தங்களது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். எனவே உலகின் மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் அந்த 4 பேரும் சிறந்த பேட்ஸ்மேன்களாக வல்லுநர்களால் பாராட்டப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று அந்த ஃபேப் 4 பேட்ஸ்மேன்களின் பிறந்த தினமாகும். ஆம் நியூசிலாந்தின் மறைந்த முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோ தான் முதல் முறையாக கடந்த 2014 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஃபேப் 4 எனும் வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அன்றைய நாளில் ஈஎஸ்பிஎன்க்ரிக்இன்போ இணையத்தில் மார்ட்டின் க்ரோ ஒரு சிறப்பு கட்டுரையை எழுதினார்.

- Advertisement -

மார்ட்டின் க்ரோ கணிப்பு:

அதில் விராட், ஸ்மித், ரூட், வில்லியம்சன் ஆகியோரிடம் அற்புதமான திறமை பொறுப்பு ஆகியவை இருப்பதாக க்ரோ கூறினார். எனவே இந்த நால்வரும் வருங்காலங்களில் தங்களுடைய நாடுகளின் கேப்டன்களாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று அவர் கணித்திருந்தார். அத்துடன் இந்த நால்வருக்குள்ளும் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற போட்டி இருக்கும் என்றும் அவர் கணித்திருந்தார்.

இது பற்றி மார்ட்டின் க்ரோ கூறியது பின்வருமாறு. “ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு பசி, திறமை மற்றும் பொறுப்பு உள்ளது. இந்த நான்கு பேரும் தங்களுடைய நாடுகளின் கேப்டன்களாக செல்வார்கள். அந்த 4 பேரும் உச்சநிலையை அடையும் போது யார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பார்கள் என்ற உண்மையான சண்டை அவர்களுக்குள் இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

உண்மையான கணிப்பு:

அவருடைய கணிப்பு நாளடைவில் உண்மையானது என்றே சொல்லலாம். குறிப்பாக விராட் கோலி 2014 – 2022 வரை சிறந்த பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதே போல கேன் வில்லியம்சன், ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் தங்களுடைய நாடுகளின் கேப்டனாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க: அதை மறந்துடுங்க.. விராட் கோலியை எப்போதுமே பாபர் நெருங்கக் கூட முடியாது.. டேனிஷ் கனேரியா

இருப்பினும் தற்போது பல்வேறு காரணங்களால் அவர்கள் கேப்டனாக இல்லை. ஆனால் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் அந்த நால்வரில் ஜோ ரூட் முதல் ஆளாக 10000 ரன்கள் கடந்து 33 சதங்களை அடித்து முன்னிலையில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் தலா 32 சதங்களுடன் உள்ளனர். 2019க்குப்பின் சரிவை சந்தித்த விராட் கோலி 29 சதங்களுடன் 4வது இடத்தில் உள்ளார்.

Advertisement