பேட்டிங்கில் உங்களோட அதிரடி போதும்.. இனிமே இதை பண்ணுங்க – ரோஹித் சர்மாவிற்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்கும் அபிஷேக் நாயர்

Abhishek-Nayar
- Advertisement -

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ரோகித் சர்மா டி20 வகையிலான போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியை தயார் படுத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் அடுத்த வெற்றிக்காக தற்போது இந்திய அணி தயாராகி வருகிறது.

முழுவீச்சில் தயாராகும் ரோஹித் சர்மா :

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு ஒரு மாத காலம் ஓய்வு உள்ளதால் இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

- Advertisement -

ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்களான அஸ்வின், விராட் கோலி போன்றோருக்கு பிசிசிஐ அனுமதியுடன் ஓய்வு வழங்கியுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் அடுத்த டெஸ்ட் தொடருக்காக தற்போது தயாராகி வருகிறார்.

அந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான அபிஷேக் நாயருடன் இணைந்து மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வரும் அவர் பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பேட்டிங் பயிற்சி தவிர்த்து விட்டு அவரது முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படும் ஃபிட்னஸ் விஷயத்தில் தற்போது அபிஷேக் நாயர் கவனம் செலுத்தி ஸ்பெஷல் பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் பிரத்யேக மைதானத்தில் ரோகித் சர்மாவுக்கு கார்டியோ பயிற்சியை வழங்கி வரும் அவர் ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க : நான் கேப்டனா இருந்தா தோனியை 2019 செமி ஃபைனலில் அங்க விளையாட வெச்சுருப்பேன்.. ரோஹித் பேட்டி

அடுத்த மாதம் துவங்கவுள்ள வங்கதேச தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மாவை பிட்டாக மாற்றும் முயற்சியில் தற்போது அபிஷேக் நாயர் தீவிரமாக இறங்கியுள்ளதால் ரோகித் சர்மா முன்பை விட முழு உடற்தகுதி பெற்று இன்னும் அதிரடியாக விளையாட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement