அது வரைக்கும் விளையாடுவாரு.. மகத்தான விராட் கோலி கிங் இல்லன்னு அவரே சொல்வாரு.. பசித் அலி கருத்து

Basit Ali Virat
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி தம்முடைய 16வது வருடத்தை நிறைவு செய்தார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் அதே வருடம் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அப்போதிலிருந்து ஆல் ஃபார்மெட்டிலும் அசத்தலாக விளையாடி வரும் அவர் இதுவரை 26,000+ ரன்கள் 80 சதங்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள அவர் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அவருடைய தலைமையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

கிங் கிடையாது:
இந்நிலையில்மகத்தான விராட் கோலி 19 வருடங்கள் விளையாடுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பசித் அலி பாராட்டியுள்ளார். அதே சமயம் அனைவரும் அழைப்பது போல விராட் கோலி கிங் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கிரிக்கெட்டை விட இங்கு யாருமே பெரியவர் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி மகத்தான பேட்ஸ்மேன் என்று பாராட்டும் பசித் அலி இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இது சிறப்பான சாதனை. விராட் கோலி 16 அல்ல இன்னும் 3 வருடம் விளையாடி மொத்தம் 19 வருடங்கள் விளையாடுவார். ஏனெனில் சூப்பர் ஃபிட்டாக உள்ள அவர் அர்ப்பணிப்பை கொண்டவர். விராட் கோலியை பாருங்கள். அதற்குப் பெயர் தான் அர்ப்பணிப்பு. சச்சின் டெண்டுல்கர், அன்வர், இனசமாம், மியான்தத், முகமது யூசுப், சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான் போன்றவர்கள் அர்ப்பணிப்பின் காரணமாகவே நீண்ட காலம் விளையாடினர்”

- Advertisement -

“இன்றைய குழந்தைகள் பாபர் அசாம் இப்படி கவர் டிரைவ் அடிக்கிறார். விராட் கோலி அப்படி விளையாடுகிறார் என்று கூறுகிறார்கள். இருப்பினும் அதற்கு முன் அவர்கள் அதிக பயிற்சி செய்வதாலேயே போட்டியில் கச்சிதமாக விளையாடுகின்றனர். ஆனால் கிங் என்று சொல்வதால் விராட் கோலியே மோசமாக உணர்வார். அவரிடம் கேட்டால் கூட தம்மை கிங் என்று அழைக்காதீர்கள் என்றே சொல்வார்”

இதையும் படிங்க: இந்தியா மிஸ் பண்ணப் போறாங்க.. ஆஸி மண்ணில் ஹாட்ரிக் வெற்றிக்கு அவர் தேவை.. பசித் அலி பேட்டி

“ஏனெனில் கிரிக்கெட்டை விட இங்கே யாரும் பெரியவர் கிடையாது. தன்னுடைய பேட்டிங் மற்றும் ரன்களை பற்றி பேசினால் விரும்பக்கூடிய விராட் கோலி கிங் என்று சொல்லாதீர்கள் என்றே சொல்வார். ஏனெனில் டான் பிராட்மேன், கவாஸ்கர், சச்சின் கூட தங்களை கிங் என்று சொன்னதில்லை. எனவே விராட் கோலி கிங் கிடையாது. தற்சமயத்தில் அவர் மகத்தான பேட்ஸ்மேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலியும் தம்மை கிங் என்றழைக்காதீர்கள் என்றே சமீபத்தில் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Advertisement