கெளதம் கம்பீருக்கு ஆர்டர் போட நான் யார்? இந்திய அணியில் ஸ்ஃப்லிட் கோச்சிங் பற்றி ஜெய் ஷா பேட்டி

Jay SHah 7
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனவே 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அனுபவம் கொண்ட கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா 3வது சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் ஆரம்பத்தில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங் போன்ற வெளிநாட்டவர்களை தேடிய பிசிசிஐ கடைசி நேரத்தில் கம்பீரை பயிற்சியாளராக நியமித்தது. அத்துடன் கௌதம் கம்பீர் தமக்கு தேவையான துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சலுகையையும் பிசிசிஐ வழங்கியது.

- Advertisement -

சொல்ல முடியாது:
முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெவ்வேறு வகையான ஃபார்மட்டுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக செயல்படுகிறார். அதே போல வெள்ளைப்பந்து அணிக்கு மார்கஸ் ட்ரெஸ்கோதிக் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் வரலாற்றில் இந்திய அணியில் மட்டும் அவ்வாறு தனித்தனி பயிற்சியளர்கள் நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் 3 வகையான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்ததாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். எனவே அவரது விருப்பத்தை தாண்டி குறிப்பிட்ட ஃபார்மட்டில் மட்டும் பயிற்சியாளராக செயல்படுங்கள் என்று தாம் ஆர்டர் போட முடியாது என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள புதிய பயிற்சியாளரின் சொற்களை கேட்கிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கௌதம் கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார். எனவே நீங்கள் குறிப்பிட்ட ஃபார்மட்டில் பயிற்சியாளராக செயல்பட முடியாது என்று அவரிடம் சொல்வதற்கு நான் யார்?”

இதையும் படிங்க: தோனிக்காக விதிமுறையை மீண்டும் கொண்டு வரும் பிசிசிஐ.. சிஎஸ்கே அணிக்கு சாதகம்.. வெளியான தகவல்

“அது ஒரு புறமிருக்க நமது 70% வீரர்கள் ஒரே நேரத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள்” என்று கூறினார். அந்த வகையில் பெரும்பாலான வீரர்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் இந்திய அணிக்கு தனித்தனியாக தேவையில்லை என்று ஜெய் ஷா கூறினார். இதைத் தொடர்ந்து வரும் 2027 டிசம்பர் வரை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement