எதிரியே ஐசிசி தான்.. ஒன்னுமே செய்யாத பாபர் எப்படி நம்பர் ஒன்.. கில் என்ன செஞ்சாரு? பசித் அலி கேள்வி

Basit Ali Babar
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்திய வருடங்களில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்றது. அதனால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தற்சமயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஏனெனில் அவரை விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடுவது வழக்கமாகும்.

ஆனால் 2023 உலகக் கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடிய அவர் தோல்விக்கு காரணமானார். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையிலும் அரை சதமடிப்பதற்கே திண்டாடிய அவர் பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவவில்லை. அந்த சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.

- Advertisement -

ஐசிசிக்கு கேள்வி:
அதில் 2024 இலங்கை தொடரில் அசத்திய ரோகித் சர்மா 37 வயதில் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார். அதே போல 3வது இடத்தில் சுப்மன் கில், 4வது இடத்தில் விராட் கோலி உள்ளனர். பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை உட்பட கடந்த ஒரு வருடமாக சுமாராக விளையாடிய பாபர் அசாம் எப்படி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்க முடியும்? என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி ஐசிசி’க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல சுப்மன் கில் 3வது இடத்தில் நீடிப்பது எப்படி? என்றும் வினவும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாம் மேலே இருக்கிறார். 2, 3, 4வது இடங்களில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி உள்ளனர். டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா போன்ற மற்ற வீரர்களின் பெயர்களை நான் படிக்க விரும்பவில்லை. இங்கே பாபர் அசாம் நன்றாக விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் பாபர் அசாம் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தால் போதும் என்று மகிழ்ச்சியாக இருப்பார். யார் இந்த தரவரிசையை கொடுக்கிறார்கள்? எதன் அடிப்படையில் பாபர் அசாம், சுப்மன் கில் அங்கே இருக்கின்றனர். ஏனெனில் பாபர் அசாம் கடைசியாக கடந்த உலகக் கோப்பையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினர். ரவீந்திரா, டீ காக், ஹெட், கோலி ஆகியோரும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடி ஓரிரு சதங்களை அடித்தனர்”

இதையும் படிங்க: துலீப் கோப்பையில் கழற்றி விடப்பட்டதால்.. கேரியர் முடிந்த 5 தரமான இந்திய சீனியர் வீரர்கள்

“அதே போல ரிஸ்வான், பக்கார் ஜமான் ஆகியோர் தலா 1 சதம் அடித்தனர். ஆனால் கடைசியாக ஆசியக் கோப்பையில் நேபாளுக்கு எதிராக சதமடித்த பாபர் அசாமுக்கு எப்படி இது போன்ற தரவரிசையை கொடுக்கின்றனர்? ஐசிசியில் இருப்பவர்கள் பாபர் அசாமின் எதிரிகள். உண்மையில் பாபர் அசாமிடம் கேட்டால் கூட அவர் தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று சொல்ல மாட்டார். விராட் கோலி அல்லது டிராவிஸ் ஹெட்டை தேர்ந்தெடுப்பார்” என்று கூறினார்.

Advertisement