இந்தியாவுக்கா தெரியாது? இலங்கை அணி வேணும்னே அதை செஞ்சாங்க.. நாமும் மாறல.. ஆகாஷ் சோப்ரா 

Aakash Chopra 22
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சுழலுக்கு சாதகமாக இருந்த கொழும்பு ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாமல் ஆல் அவுட்டானார்கள். அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெறாத இலங்கை அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய சொந்த மண்ணில் உள்ளூர் தொடர்களில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் போதுமான அளவுக்கு விளையாடுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இலங்கையின் திட்டம்:
ஆனால் இலங்கை அணி வேண்டுமென்று இந்தியாவை தோற்கடிப்பதற்காக கொழும்புவில் சுழலுக்கு அதிகமாக கை கொடுக்கும் பிட்ச் அமைத்ததாக அவர் விமர்சித்துள்ளார். அதே சமயம் இந்தியா தங்களது சொந்த மண்ணில் புனே (2017), இந்தூர் (2023) போன்ற அதிக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அதிகபடியாக சுழலும் பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடுவதில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “நாமும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களை எதிர்கொண்ட பின்பு தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருகிறோம். சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்சனை கிடையாது. எனவே நாமும் அது போன்ற மைதானங்களில் விளையாடும் திறமையை கொண்டவர்களே”

- Advertisement -

“ஆனால் கொழும்புவில் இருந்ததைப் போல இயல்பை விட அதிகமாக சுழலும் ஆடுகளங்களில் பந்து கொஞ்சம் மெதுவாக நின்று பேட்டுக்கு வருகிறது. அதை நம் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். சமீப காலங்களில் புனே, இந்தூர், கொழும்பு போன்ற மைதானங்களில் நாம் சுழலுக்கு எதிராக தடுமாறியுள்ளோம். குறிப்பாக பந்து அதிகமாக சுழலும் போது நமது பேட்ஸ்மேன்கள் சாதாரணமானவர்களாகவே தெரிகின்றனர்”

இதையும் படிங்க: அந்த தொடருக்கு சமமாக இந்தியாவால்.. ஆஸ்திரேலியாவுக்கு 6 மடங்கு லாபம் கிடைச்சுருக்கு.. நிக் ஹாக்லி மகிழ்ச்சி

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நாம் ஃபிளாட்டான பிட்ச்களில் அதிகமாக விளையாடுகிறோம். நமது சர்வதேச அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிக உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. அதனால் நமது பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது இப்படி சுழலுக்கு எதிராக தடுமாறுவது தொடர்கிறது” என்று கூறினார். முன்னதாக ஃபிளாட்டான பிட்ச்களில் விளையாடி பழகிய இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு கொழும்புவில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்தோம் என்று இலங்கை கேப்டன் அசலங்கா மற்றும் தீக்சனா ஆகியோர் வெற்றிக்குப் பின் முடிவில் வெளிப்படையாக சொன்னது குறிப்பிடத்தக்கது.

Advertisement