அவரோட வேலை செஞ்சது பெருமை.. 2024 டி20 உ.கோ ஜெயிக்க ஈகோயில்லாத அவங்க தான் காரணம்.. டிராவிட் பேட்டி

Rahul Dravid 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கியது. அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா கடைசி வரை தோல்வியை சந்திக்காமல் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர் தோல்விகளையும் உடைத்தது. அந்த வெற்றிக்கு சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அணுகுமுறையை பின்பற்றிய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

டிராவிட் பாராட்டு:
அதே போல தொடர் முழுவதும் தடுமாறினாலும் முக்கியமான ஃபைனலில் அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். அவர்கள் அனைவரையும் விட ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். மேலும் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் உட்பட விளையாடிய அனைத்து வீரர்களுமே இந்தியாவின் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

அத்துடன் அவர்களுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக ஓய்வு பெற்றார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு ரோகித், விராட், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தான் முக்கிய காரணம் என்று ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். மேலும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து வேலை செய்ததை கௌரவமாக கருதுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த வெற்றிக்கான முழு பாராட்டையும் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நமது அணி சீனியர் வீரர்களாலும் கேப்டனாலும் நடத்தப்பட்டதாக நான் நம்புகிறேன். ரோஹித் சர்மாவுடன் இணைந்து வேலை செய்தது கௌரவமாகும். கடந்த இரண்டரை வருடங்களில் அவர் சிறந்த கேப்டனாக செயல்பட்டார். உண்மையில் வீரர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ரோஹித், ஸ்மித்திடம் இல்லாத திறமை விராட் கோலியிடம் இருக்கு.. எல்லா காலத்திலும் அசத்திருப்பாரு.. ரவி சாஸ்திரி 

“இந்திய அணியில் சூப்பர்ஸ்டார் வீரர்களிடம் ஈகோ இருக்கும் என்பதால் அவர்களை கையாள்வது கடினம் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது அதற்கு நேர்மாறானது. ஏனெனில் இந்த சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களுடைய தயாராகும் வழிமுறைகள், நெறிமுறைகளில் கட்டுக்கோப்புடன் இருப்பார்கள். அதனாலேயே அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக இந்த வயதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொண்டு கற்றுக்கொள்ள விரும்புவதை பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement