மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வெங்கடேஷ் ஐயருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு – இதை செய்தால் கம்பேக் உறுதி

Venky
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் அந்த தொடரின் இறுதிப்போட்டியிலும் அரைசதம் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

அதோடு மீண்டும் இந்திய அணிக்காக அவர் சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு அடுத்த ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் வலுத்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு அடுத்த ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்ட அவர் தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது மீண்டும் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அண்மையில் ஸ்ருதி என்கிற தனது தோழியை திருமணம் முடித்துக் கொண்ட வெங்கடேஷ் ஐயர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் முதல் இரண்டு போட்டியில் பெரிய ரன்களை அடிக்காத அவர் வெறும் 15 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இந்திய அணிக்கு அவர் திரும்ப வேண்டுமெனில் இனிவரும் கவுண்டி போட்டியில் அவர் தனது் தனது திறனை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒருவேளை இந்த கவுண்டி போட்டியில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு அவரது கைகளில் உள்ளது.

இதையும் படிங்க : ரோஹித், ஸ்மித்திடம் இல்லாத திறமை விராட் கோலியிடம் இருக்கு.. எல்லா காலத்திலும் அசத்திருப்பாரு.. ரவி சாஸ்திரி

இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் விளையாடுவதன் மூலமாக அவரது திறன் மற்றும் அனுபவம் அதிகரிக்கும் என்பதனால் நிச்சயம் இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் கவனத்தை ஈர்ப்பார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement