ஃபுட் ஒர்க் தெரியாத துபேவுக்கு பதிலாக அவருக்கு சான்ஸ் கொடுக்கலாமே? கம்பீரை விமர்சித்த ஸ்ரீகாந்த்

Srikkanth 2
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக முதல் போட்டியில் 231 ரன்களை அடிக்க முடியாத இந்தியா 2வது போட்டியில் 241 ரன்களை அடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடத்துக்கு பின் இலங்கைக்கு எதிராக ஒரு தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டுள்ளது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே பொருந்தக்கூடிய சிவம் துபே இந்திய ஒருநாள் அணியிலேயே இருக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஏனெனில் ஃபிளாட்டான பிட்ச்களில் அடிக்கக்கூடிய துபே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அசத்துவதற்கு தேவையான ஃபுட் ஒர்க்கை கொண்டிருக்கவில்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் கேள்வி:
குறிப்பாக தனது கடைசி ஒருநாள் போட்டியில் சவாலான தென்னாபிரிக்க மண்ணில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சாம்சனுக்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்றும் அவர் கௌதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “சிவம் துபே இந்திய ஒருநாள் அணியிலேயே இருக்கக் கூடாது”

“சிவம் துபேவுக்கு இவ்வளவு வாய்ப்பு கொடுத்தும் தூக்கும் நீங்கள் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காதது எனக்கு புரியவில்லை. அது நியாயமே இல்லை. சூரியகுமார் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் கிளிக் ஆகவில்லை. இருப்பினும் டி20 அணியில் கேப்டனாக இருக்கும் அவருக்கு ஒருநாள் அணியில் இடமில்லை. சுப்மன் கில் ஆல் ஃபார்மட் பிளேயர் என்றால் சூரியகுமார் இல்லையா?”

- Advertisement -

“துபே ஃபீல்டிங்கில் அசத்த மாட்டார். பவுலிங்கில் சுமாராகவே செயல்படுவார். பேட்டிங்கில் அவரிடம் ஃபுட் ஒர்க் இல்லை. அவர் தன்னுடைய ஏரியாவில் பந்து வேகம் இல்லாமல் சுழலாமல் பவுன்ஸ் ஆகாமல் நேராக வந்தால் தான் அடிப்பார். ஐபிஎல் தொடரின் போது நானே துபேவை பாராட்டினேன். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் துபே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: தப்பை ஒத்துக்கோங்க அதை விட்டுட்டு அவரை இன்சல்ட் பண்ணாதீங்க.. கம்பீர், அபிஷேக் நாயரை விளாசிய ஸ்ரீகாந்த்

“அதற்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்களேன். அவர் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் தனது கடைசி போட்டியில் சதமடித்தார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வென்றால் மட்டுமே 27 வருடத்திற்கு பின் இலங்கையிடம் ஒரு தொடரில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து இந்தியா தப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement