இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொழும்புவில் ஆகஸ்ட் நான்காம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் அடித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் இந்தியாவை 208 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் தோற்றது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு:
இந்நிலையில் சாவலான பிட்ச்சில் தரமான சுழலை எதிர்கொள்ள ரோஹித் சர்மாவை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாருமே இல்லையா? என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் பயிற்சியே எடுக்காமல் நேரடியாக களமிறங்கியது போல் இலங்கை பவுலர்களிடம் அவுட்டானதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பசித் அலி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் மோசமான செயல்பாடு. காலையில் ஒலிம்பிக்கில் ஹாக்கி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா மாலையில் இங்கே அதற்கு நேர்மாறாக செயல்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் – கேஎல் ராகுல் ஆகியோர் பயிற்சி எடுக்காமலேயே இத்தொடருக்கு வந்தது போல் தெரிகிறது”
“அது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 97 ரன்களில் தான் முதல் விக்கெட் விழுந்தது. இது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பேட்டிங் வரிசை போல் தெரியவில்லை. ரோஹித் ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து அவுட்டானார். இந்திய அணியில் ரோஹித் மட்டும் தான் ஒரே பேட்ஸ்மேனா? மற்றவர்கள் இல்லையா. கில் 30 – 35 ரன்களில் அவுட்டானால் யார் பொறுப்பை எடுத்துக் கொள்வது? எப்போதும் விராட் கோலி – ரோஹித் பெயர் மட்டும் தான் கேட்க வேண்டுமா? மற்றவர்கள் என்ன செய்கின்றனர்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் மாதிரி இந்தியாவும் இதை மறந்துட்டாங்களா? கம்பீர் அவங்கள செலெக்ட் பண்ணனும்.. பசித் அலி விமர்சனம்
“அக்சர் பட்டேல் மட்டுமே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடினார். ஸ்ரேயாஸ் ஐயர் இது போன்ற செயல்பாடுகளால் என்ன செய்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ரிஷப் பண்ட், ரிங்கு சிங், ரியன் பராக் ஆகியோர் வர வேண்டிய நேரம். உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து கம்பீர் சில வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். அதை விட்டுவிட்டு இந்தியா இப்படி பெயரை பார்த்து வீரர்களை தேர்வு செய்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ரா



