கெளதம் கம்பீரால் நீண்ட காலம் இந்தியாவின் பயிற்சியாளராக நீடிக்க முடியாது.. இதான் காரணம்.. ஜோஹிந்தர் சர்மா பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அப்படி மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட அவர் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இலங்கை தொடரிலிருந்து கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் பயிற்சியாளராக வந்ததும் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்ட அவர் சூரியகுமாரை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோரை கழற்றி விட்ட அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

நீடிக்க மாட்டாரு:
அதே போல இலங்கை ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை அவர் வலுக்கட்டாயமாக விளையாட வைத்துள்ளார். அப்படி சில அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் கம்பீர் 2027 டிசம்பர் மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அதற்குள் அவர் ஒரு உலகக் கோப்பையாவது இந்தியா வெல்ல உதவுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் கௌதம் கம்பீர் பெரும்பாலும் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்று முன்னாள் இந்திய வீரர் ஜோஹிந்தர் சர்மா தெரிவித்துள்ளார். எனவே நீண்டகாலம் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் என்றும் அவர் கணித்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் கம்பீருடன் இணைந்து விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கௌதம் கம்பீர் நமது அணியை நிர்வகிக்க வேண்டியவர். ஆனால் அந்த இடத்தில் அவர் நீண்ட காலம் இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கௌதம் கம்பீர் தன்னுடைய சொந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர். அதனால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திய வீரர்களுடன் அவருக்கு முரண்பாடு ஏற்படலாம். இங்கே விராட் கோலியை பற்றி நான் பேசவில்லை. ஆனால் பெரும்பாலான தருணங்களில் கௌதம் கம்பீர் எடுக்கும் முடிவுகள் மற்றவர்கள் விரும்பும் வகையில் இருக்காது”

இதையும் படிங்க: 45 பிட்ச், ஒலிம்பிக் குளம்.. உலகத் தரத்தில் இந்தியா.. புதிய தேசிய அகாடமியின் வசதிகளை வெளியிட்ட ஜெய் ஷா

“அத்துடன் கௌதம் கம்பீர் எதையும் நேரடியாக பேசுவார். அவர் யாரிடமும் தாமாக செல்ல மாட்டார். நான் தாம் அவருக்கு பாராட்டு கொடுப்போம். அவர் தன்னுடைய வேலையை உண்மையாக செய்வார்” என்று கூறினார். அவர் கூறுவது போல அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடிய கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் எவ்வளவு காலம் இணைந்து செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement