27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு தொடரும் சோகம்.. கெத்து காட்டி வரும் இந்திய அணி – இம்முறையும் விடக்கூடாது

IND-vs-SL
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே கொழும்பு நகரில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் இருந்த எளிதான வெற்றியை கோட்டை விட்ட இந்திய அணி அந்த போட்டியை “டை” செய்தது.

- Advertisement -

இதன் காரணமாக இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு போட்டி இனிவரும் நாட்களில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி இந்த இரண்டு போட்டியையும் வெற்றி பெற்று தங்களது வரலாற்று சாதனையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக 1997-ஆம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணியை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

அதற்கு அடுத்து நடைபெற்ற 27 ஆண்டுகளில் எந்த ஒரு தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது. ஒரு சில தொடர்களில் தொடர் சமநிலையை அடைந்தாலும் இந்திய அணி இலங்கை அணியிடம் கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள் தொடரை விட்டுக் கொடுத்ததே கிடையாது.

இதையும் படிங்க : வார்னே, அக்ரம் மாதிரி திறமை கொண்ட பும்ரா சொன்னா அது அப்படியே கேட்குது.. ரவி சாஸ்திரி பாராட்டு

எனவே அந்த வரலாற்று சாதனை தக்க வைக்கும் விதமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த மாபெரும் சாதனையை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement