இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒய்ட்வாஷ் செய்து வென்றது. குறிப்பாக கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்து இந்தியா அசத்தலான வெற்றி பெற்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்குகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அதனால் டி20 தொடரிலேயே தடுமாறிய இலங்கையை ஒருநாள் தொடரிலும் இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரோஹித்தின் மெசேஜ்:
முன்னதாக இந்தத் தொடரில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா முதல் முறையாக பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் சேர்ந்து இந்தியாவுக்காக களமிறங்குகிறார். உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட இப்போதும் விருப்பம் இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஓய்வு பெற்று விட்டதால் இளம் வீரர்களுக்கு வழி விடுவதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் அணுகுமுறை மாற்றி அதிரடியாக விளையாடி உலகக் கோப்பையை வென்றதைப் போல ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணியை மாற்றப் போவதாக ரோஹித் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர்களிடம் ரோஹித் பேசியது பின்வருமாறு.
“உலகக்கோப்பை வென்ற மாதம் அற்புதமாக இருந்தது. எங்களின் சிறப்பான நினைவுகள் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அது போன்ற தருணம் எப்போதும் நம்முடன் இருக்கும். குறுகிய ஃபார்மட்டில் விளையாட எப்போது வேண்டுமானாலும் எனது பேட்டில் கை வைக்க முடியும் என்று உணர்கிறேன். இருப்பினும் கிடைத்த நேரத்தில் ரசித்து விளையாடிய நான் அதிலிருந்து செல்ல வேண்டிய நேரம் இது”
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கு அந்த முன்னாள் இந்திய ஜாம்பவான் பயிற்சியாளராக வந்தா நல்லா இருக்கும் – இயான் மோர்கன் கருத்து
“இது களத்திற்கு மீண்டும் சென்று புதிய பயிற்சியாளருடன் சேர்ந்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் நேரம். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய கிரிக்கெட்டை உயரத்திற்கு கொண்டு செல்லும். இது ரீசெட் பட்டனை அழுத்த வேண்டிய நேரம். நாங்கள் மீண்டும் களத்திற்கு சென்று கொஞ்சம் பழைய, புதிய வீரர்களுடன் அதே எனர்ஜி, ஆர்வத்துடன் இந்தியாவுக்காக விளையாட உள்ளோம். இது இந்திய அணி, இது உங்களுடைய கேப்டன் ரோகித் சர்மா. லெட்ஸ் கோ” என்று உத்வேகமாக பேசினார்.



