ஹோம் ஒர்க் பண்ணோம்.. இந்த வாய்ப்பை கொடுத்த அவருக்கு நன்றி சொல்றேன்.. இலங்கை சாய்த்த சுந்தர் பேட்டி

Washington SUndar
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது. ஜூலை 30ஆம் தேதி பல்லகேல் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 39, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷாங்கா 26, குஷால் மெண்டிஸ் 43, குசால் பெரேரா 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது ஹசரங்கா 3, கேப்டன் அஸலங்காவை 0 ரன்களில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார்.

- Advertisement -

ஆட்டநாயகன் சுந்தர்:
இருப்பினும் கடைசி 2 ஓவரில் இலங்கைக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 19வது வீசிய ரிங்கு சிங் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது கேப்டன் சூரியகுமார் 6 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனால் இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே கொடுத்தார். இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்களை துரத்திய இந்தியாவை கேப்டன் சூரியகுமார் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா இத்தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார். அது பற்றி வாசிங்டன் சுந்தர் பேசியது பின்வருமாறு. “இதற்கு நான் செய்த உழைப்பும் கடவுளின் ஆசிர்வாதமும் உதவி செய்தது. சூப்பர் ஓவரில் அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன்”

இதையும் படிங்க: 12 பந்தில்.. தமிழகத்தின் சுந்தர் மேஜிக்.. சூப்பர் ஓவரில் இலங்கையின் வெற்றியை இந்தியா தட்டிப்பறித்தது எப்படி?

“அது போன்ற சூழ்நிலையில் என்னிடம் பந்தை கொடுத்த சூரியகுமாருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நாங்கள் ஹோம் ஒர்க் செய்தோம். பிட்ச்சில் கொஞ்சம் உதவி இருந்தது. அதில் நான் சரியான லென்த்தில் வீசினேன்” என்று கூறினார்.

Advertisement