என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? கிடைச்ச ஒரு வாய்ப்பையும் வீணடித்த சஞ்சு சாம்சன் – வருத்தத்தில் ரசிகர்கள்

Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டே டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை 9 ஆண்டுகளில் வெறும் 30 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மிகச் சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு பல ஆண்டுகளாக தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இடம்கிடைத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம் கிடைத்தது.

- Advertisement -

அதன்படி நடைபெற்று வரும் இந்த இலங்கை தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு பதிலாக துவக்க வீரராக வாய்ப்பினை பெற்றார்.

இந்த வாய்ப்பில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சினை கணிக்க முடியாமல் போல்டாகி ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பிலும் அவர் டக் அவுட் ஆனதால் மீண்டும் அணியிலிருந்து வெளியேற்றப்படும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அவரது இந்த மோசாமான ஆட்டம் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். மேலும் மிகச்சிறப்பான திறமை இருந்தும் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அவர் தவித்து வருவதும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தப்பா போட்டதும் சரியா வேலை செஞ்சுது.. இலங்கையை 2வது போட்டியில் வீழ்த்திய.. ஆட்டநாயகன் பிஸ்னோய் பேட்டி

நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்போதே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement