ரோஹித் சர்மாவுக்கு தலை வலியா மாறப்போறதே இந்த விடயம் தான் – ராபின் உத்தப்பா கருத்து

Uthappa
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடர் வரும் 27-ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மாவும் செயல்பட இருக்கின்றனர். அதோடு இந்த தொடரில் பயிற்சியாளராக முதல் முறையாக கௌதம் கம்பீர் வழிநடத்த இருப்பதால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ரோகித் சர்மாவிற்கு மிகப்பெரிய கடினமான விடயமாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? என்பதை தேர்வு செய்வது நிச்சயம் ரோகித் சர்மாவிற்கு கடினமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே கே.எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட் பொறுத்தவரை மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ரிஷப் பண்ட்டும் தற்போது தனது திறனை நிரூபித்து மீண்டும் இணைந்து விளையாடி வருவதால் அவர்களின் இருவரில் யாரை தேர்வு செய்வது? என்பது பெரிய குழப்பம் இருக்கும். ஆனால் கம்பீரும் ரோகித் சர்மாவும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுக்கப் போகிறார்கள். இந்திய அணி தற்போது புதிய தலைமையின் கீழ் சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : விலகும் நட்சத்திரம்.. ஐபிஎல் 2025 தொடரில் பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் யுவராஜ் சிங்.. எந்த அணிக்கு தெரியுமா?

எனவே இனிவரும் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். அதேபோன்று கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவது அவர்களது உடற்தகுதியை பொருத்தே இருக்கிறது அவர்களால் இன்னும் சில ஆண்டுகள் பயணிக்க முடியும் என்று கருதுவதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Advertisement