தோனியின் தலைமையின் கீழ் விளையாடி விட்டேன்.. ஆனாலும் ஒரு ஆசை நிறைவேறாமல் போய்விட்டது – ஷிவம் துபே கருத்து

Dube
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிவம் துபே தனது நிறைவேறாத ஆசை குறித்தும் தோனியின் தலைமையில் விளையாடிக் குறித்தும் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு வீரர்களை உருவாக்கிய தல தோனிக்கு கீழ் உருவாகிய ஷிவம் துபே தான் அவரது தலைமையின் கீழ் விளையாடிய விதம் குறித்தும், தனது ஒரு ஆசை நிறைவேறாமல் போனது குறித்தும் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த ஷிவம் துபே மீது தோனி நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்தார். அதன்பின்னர் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னை அணிக்கு வந்த பின்னர் ஷிவம் துபேவின் ஆட்டமும் மெருகேறியது.

- Advertisement -

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் ஷிவம் துபேக்கு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை அணியிலும் இடம் கிடைத்தது. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் கோப்பையை வெல்ல காரணமாகவும் திகழ்ந்திருந்தார். சிவம் துபே சிஎஸ்கே அணியில் பேட்டிங்கை சிறப்பாக செய்து வந்தாலும் அவருடைய பந்துவீச்சை தோனி பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனாலும் ஷிவம் துபே ஒரு பகுதிநேர பந்துவீச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனாக அவரை தோனி உருவாக்கி இருந்தார். இந்நிலையில் ஷிவம் துபே தோனி குறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது :

- Advertisement -

எனக்கு தோனியின் கேப்டன்சியில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நான் இந்திய அணியில் அறிமுகமாகும் முன்பே அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அதனால் என் கனவு நிறைவேறாமல் போய்விட்டது ஆனாலும் அவரது கேப்டன்சியின் கீழ் சிஎஸ்கே அணியில் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்.

இதையும் படிங்க : 140 கூட 150 கி.மீ மாதிரி தெரியும்.. இதனால் தான் பும்ராவை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுறாங்க.. கபில் தேவ்

எனது ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு அவர் தந்த சிறிய சிறிய அறிவுரைகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் முதலில் தோனியை அனுகுவதற்கு பயந்தேன். ஆனால் ஐபிஎல் தொடரின் போது அவருடன் நெருங்கி பழகிய கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை அப்படியே தான் இருக்கிறது என துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement