பாண்டியா கழற்றி விடப்பட்டு சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

Ajit Agarkar
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெல்வதற்கும் துணை கேப்டனாக பாண்டியா முக்கிய பங்காற்றினார். ஆனால் அடுத்ததாக நடைபெறும் இலங்கை டி20 தொடரில் அவரை துணை கேப்டனாக கூட நியமிக்காத தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் கேப்டனாக சூரியகுமாரை பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

காரணம் என்ன:
அத்துடன் ஹர்திக் பாண்டியாவை சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய துணை கேப்டனாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா முழுமையான ஃபிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூரியகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது பற்றி மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கௌதம் கம்பீருடன் இணைந்து அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் ஃபிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் ஃபிட்னஸ் தான் சவாலாகும்”

- Advertisement -

“ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூரியகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதே சமயம் ஹர்திக் பாண்டியாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம்”

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்காக தரமான சர்ப்ரைஸ் கொடுத்த ஜெய் ஷா – என்ன தெரியுமா?

“இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்களிடமும் அவர்களுடைய வேலை மாறியுள்ளதா என்பதை பற்றி நாங்கள் பேசுகிறோம். அதே போல கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்டியாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்” என்று கூறினார். அந்த வகையில் சுமாரான ஃபிட்னஸ் தான் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பறிபோக காரணமாகியுள்ளது. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாக சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியாவும் இந்தியா விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement