பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்காக தரமான சர்ப்ரைஸ் கொடுத்த ஜெய் ஷா – என்ன தெரியுமா?

Jay-Shah
- Advertisement -

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்ஸ் 2024-ஆம் ஆண்டிற்கான தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஜூலை 26-ஆம் தேதி துவங்கும் இந்த மாபெரும் திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதற்காக செய்ன் நதிக்கரையை ஒட்டியுள்ள இடத்தில் பிரம்மாண்டமான துவக்க விழாவும் நடைபெற உள்ளது.

மொத்தம் மூன்று லட்சம் பேர் முன்னிலையில் இந்த நடப்பு ஒலிம்பிக் தொடரின் துவக்க நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் இருக்கும் பலதரப்பட்ட வீரர்கள் பங்கேற்பதால் இந்த தொடர் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கும் இந்த மாபெரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்தும் 117 வீரர், வீராங்கனைகள் களமிறங்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் ஒரு மாபெரும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய் ஷா அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

2024-ஒலிம்பிக்கில் நமது நாட்டை முன்னிறுத்தி பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். நம் முழு குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமை படுத்துங்கள்.. “ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அலைஸ்டர் குக் மற்றும் ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட் – அதோடு வெ.இ வீரரின் சாதனையும் முறியடிப்பு

அண்மையில் டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ இப்படி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கும் உதவி செய்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement