அக்சர் பட்டேலுக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர் தான் என்பதை உறுதி செய்து விட்டார் – இனிமே சேன்ஸ் கன்பார்ம்

Sundar
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

எனவே இனிவரும் தொடர்களில் டி20 போட்டிகளில் மிக முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியானது. அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்திற்கு பலர் மாற்றுவீரர்களாக இடம்பெற தகுதியுடன் இருந்தாலும் ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேல் மட்டுமே மாற்று வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவருக்கும் இந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக அக்சர் பட்டேலின் இடத்தில் அவருக்கு பதிலாக இந்த ஜிம்பாப்வே தொடரில் இடம் பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தர் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐந்து போட்டியிலும் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி மிக குறைந்த அளவிலான ரன்களையே வழங்கினார். இதன் காரணமாக அவருக்கு இந்த ஜிம்பாப்வே தொடருக்கான தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் இனிவரும் டி20 தொடர்களில் முக்கிய வீரராக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே ஜடேஜா இந்திய அணியில் இடம் பெறும்போது அவரைப் போன்று பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருவார்.

இதையும் படிங்க : முதல் தொடரிலேயே கேப்டனாக விராட் கோலியின்.. அபார சாதனையை சமன் செய்த சுமன் கில்

அந்த வகையில் பார்க்கையில் தற்போது அக்சர் பட்டேல் அணியில் இடம் பிடித்தாலும், அவரை போன்று பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இனி இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தினை பிடிக்கப் போகிறார். இருப்பினும் வாஷிங்டன் சுந்தருக்கு அவ்வப்போது தான் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் உறுதி.

Advertisement