அதுக்காக என்னை திட்டுனாங்க.. 2024 டி20 உ.கோ ஜெய்க்க முக்கிய காரணமான என்னை மறந்துட்டாங்க.. கங்குலி ஆதங்கம்

Sourav Ganguly
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸில் நிறைவு பெற்ற அந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி கண்டது. குறிப்பாக லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை இந்தியா தோற்கடித்தது.

அதைத்தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்தியா வலுவான ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்து மிரட்டியது. அதன் பின் செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து வெளியேற்றிய இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வென்றது.

- Advertisement -

கங்குலி ஆதங்கம்:
அத்துடன் 2013க்குப்பின் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் இந்தியா உடைத்தது. இந்த தோல்விக்கு ஃபைனலில் அசத்திய விராட் கோலி, தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். ஆனால் அவர்கள் அனைவரையும் அற்புதமாக வழி நடத்திய ரோகித் சர்மா இந்த வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அவருடைய அணுகுமுறை இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் விராட் கோலிக்கு பின் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்த போது பலரும் தம்மை விமர்சித்ததாக முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் தற்போது தம்முடைய முடிவின் காரணமாக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்ற பின் அனைவரும் தம்மை மறந்து விட்டதாக கங்குலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஆஜ்கல் எனும் மேற்குவங்க பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் பொறுப்பை ரோகித் சர்மாவின் கையில் ஒப்படைத்த போது நான் விமர்சிக்கப்பட்டேன்”

இதையும் படிங்க: லெஜெண்ட் மாதிரி விளையாடி இந்தியா ஜெயிச்சுட்டாங்க.. பாகிஸ்தானின் தோல்விக்கு இதான் காரணம்.. யூனிஸ் வருத்தம்

“ஆனால் தற்போது அவருடைய தலைமையில் நாம் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இருப்பினும் தற்போது என்னை யாரும் திட்டவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவை நான் கேப்டனாக நியமித்தேன் என்பதை அனைவரும் மறந்து விட்டனர்” என்று கூறினார். முன்னதாக 2021இல் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement