2007 டி20 உ.கோ ஃபைனல் ரிப்பீட்டாகுமா.. இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் எந்த சேனலில் பார்க்கலாம்?

World Legends Final
- Advertisement -

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடினர். அந்தத் தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது.

அவருடைய தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:
அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய சாம்பியன்ஸ் தோற்றது. ஆனால் தென்னாபிரிக்காவை விட கொஞ்சம் அதிகமான ரன் ரேட் பெற்றதன் அதிர்ஷ்டத்துடன் இந்திய சாம்பியன்ஸ் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த சூழ்நிலையில் ஜூலை 12ஆம் தேதி நார்தம்டன் நகரில் நடைபெற்ற செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய சாம்பியன்ஸ் வீழ்த்தியது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய சாம்பியன்ஸ் கேப்டன் யுவராஜ் சிங் 59, ராபின் உத்தப்பா 65, யூசுப் பதான் 59, இர்பான் பதான் 50* ரன்கள் எடுத்த உதவியுடன் 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவை 20 ஓவரில் 168/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த இந்திய சாம்பியன்ஸ் அணி மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இத்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதை நினைக்கும் போதே ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனல் தான் நினைவுக்கு வருகிறது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: 21 வருஷமா இந்த பிரச்சனை இல்லாம விளையாடியது என்னோட அதிர்ஷ்டம் – ஜேம்ஸ் ஆண்டர்சன் நெகிழ்ச்சி

எனவே இம்முறை அந்த தோல்விக்கு யூனிஸ் கான் தலைமையில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் பழி தீர்க்குமா? அல்லது 2007 போலவே இம்முறை யுவராஜ் சிங் தலைமையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை முத்தமிடுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதே போல மொபைலில்

Advertisement