இப்போதைக்கு கில் ஓகே.. ஆனா ரோஹித்துக்கு அப்றம் அவர் தான் சரியான டி20 கேப்டன்.. சபா கரீம் வெளிப்படை

Saba Karim
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி தொடர்களில் சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்கி வெற்றி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அணியில் கொண்டு வந்தார். அதை வைத்து வெற்றியும் கண்ட அவர் தற்போது 36 வயதை கடந்துள்ளதால் ஓய்வு பெற்றுள்ளார். அந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஜிம்பாப்வே தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வரும் கில் இந்திய அணியில் நிலையான இடம் பிடித்துள்ளார். எனவே அடுத்த கேப்டனாக வளர்க்கும் நோக்கத்தில் அவருக்கு இத்தொடரில் தேர்வுக்குழு கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் சுப்மன் கில்லை விட ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவுக்கு பின் அடுத்த டி20 கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவரிடம் திறன் இருக்கிறது. ஆனால் வருங்காலங்களிலும் அவரால் கேப்டனாக இருக்க முடியும் என்று தேர்வாளர்கள் மிகவும் சீக்கிரமாக முடிவு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு பின் அவர் சரியான அடுத்த கேப்டனாக இருப்பார் என்பது தெளிவாக தெரிகிறது”

- Advertisement -

“அதே சமயம் சுப்மன் கில்லை தேர்வுக்குழுவினர் ஆல் ஃபார்மட் பிளேயராக பார்க்கின்றனர். எனவே இந்திய அணியை முன்னோக்கி வழி நடத்துவதற்கு அவருக்கு கேப்டன்ஷிப் பண்புகளும் அவசியம் என்று தேர்வாளர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ஜிம்பாப்வே தொடரில் இந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் அவருக்கு நல்ல வாய்ப்பு”

இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மாதிரி நானும் அந்த விடயத்தில் அசத்த விரும்புகிறேன் – சுப்மன் கில் விருப்பம்

“மேலும் ஓய்வு பெற்ற ரோஹித், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு தற்போது நிறைய வீரர்கள் பொருந்துபவர்களாக இருக்கின்றனர். சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் அல்லது அபிஷேக் ஷர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்க தயாராகவே உள்ளனர். இந்த 3 – 4 வீரர்கள் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக காத்திருக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement