நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை வென்றது குறித்தே தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திய வேளையில் ஜடேஜாவும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த ஹார்டிக் பாண்டியா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது மட்டுமின்றி இந்த வெற்றி குறித்தும் அதில் இருந்த தனது பங்களிப்பு குறித்தும் நெகிழ்ச்சியான பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : எதிர்காலத்தில் நாங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் மிஸ் செய்வோம். டி20 உலக கோப்பையை வென்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது. ஆட்டம் என் கையில் வந்ததும் அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியதும் மகிழ்ச்சியாக உள்ளது.
நான் எப்போதுமே கடவுளை அதிகமாக நம்புவேன். கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னை பற்றி பரவி வந்தன. என்னை பற்றி தெரியாதவர்கள் கூட அதிகமாக பேசினார்கள். அனைத்திற்கும் அமைதியாக இருந்தேன். இந்த வெற்றியின் மூலம் அவர்களுக்கெல்லாம் பதிலடி தந்துள்ளதாக நினைக்கிறேன்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்த வெற்றிக்கு தகுதியான வீரர்கள் அவர்கள் இருவருக்கும் எங்களால் சிறந்த பேர்வெல்லை கொடுக்க முடிந்துள்ளது. அதேபோன்று ராகுல் டிராவிடும் ஒரு அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றில் மிகவும் மகிழ்ச்சி அவருக்கும் இப்படி ஒரு பிரியாவடை கொடுப்பது அற்புதமான உணர்வு என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மாவை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரவீந்திர ஜடேஜா – வருத்தத்தில் ரசிகர்கள்
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த வேளையில் இந்த உலககோப்பை தொடரில் அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



