நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் ரோஹித் சர்மா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது :
ரோகித் சர்மா தற்போது வேற லெவல் ஆட்டத்திறனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

அவரைப் போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டு விளையாடினால் அது முட்டாள்தனமாக போய் முடியும். ஏனென்றால் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் வேறு அவர் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் போல ஆடுகிறார். அவருடன் விளையாடும் பொழுது எனக்கு போட்டியை எவ்வாறு அணுக வேண்டும், எப்படி ரன்களை குவிக்க வேண்டும் என்று பலவற்றை கற்று வருகிறேன் என்று ராகுல் கூறினார்.



