மழை வருவது தெரிந்தும் இந்தியா – இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு மட்டும் ரிசர்வ் டே ஒத்துக்காதது ஏன்? ஐசிசி ரூல்ஸ் இதோ

IND vs ENG
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்று நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அந்த சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

2வது போட்டியில் இந்தியா – நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பொதுவாக உலகக் கோப்பை தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் மழையின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக ஐசிசி ரிசர்வ் நாளை அறிவிப்பது வழக்கமாகும். அந்த வகையில் இம்முறையும் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் போட்டிக்கு ஐசிசி ரிசர்வ் நாள் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசி விதிமுறை:
ஆனால் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது செமி ஃபைனலுக்கு ஐசிசி ரிசர்வ் நாள் ஒதுக்கவில்லை. இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம். முதலில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 26ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளது.

ஜூன் 28ஆம் தேதி செமி ஃபைனலில் வெற்றி பெறும் 2 அணிகளும் ஃபைனல் நடைபெறும் பார்படாஸ் நகருக்கு பயணிக்க வேண்டிய நாளாகும். எனவே ஜூன் 26இல் தென்னாபிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அதை மீண்டும் நடத்துவதற்கு ஜூன் 27ஆம் தேதி ரிசர்வ் நாள் இருக்கிறது. ஆனால் ஜூன் 27இல் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அதை நடத்த ஜூன் 28ஆம் தேதி காலியாக இல்லை.

- Advertisement -

அதனாலேயே அப்போட்டிக்கு மட்டும் ஐசிசி ரிசர்வ் நாளை அறிவிக்கவில்லை. இருப்பினும் மழையின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக அப்போட்டி வழக்கமான நேரத்தை தாண்டி எக்ஸ்ட்ராவாக 250 நிமிடங்களை ஐசிசி வழங்கியுள்ளது. அதன் உச்சமாக முடிந்தளவுக்கு தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடுவர்கள் நடத்த முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு வாய்ப்பில்லை.. செமி ஃபைனலில் ஜெய்ச்சுட்டா.. அவங்க தான் டி20 உ.கோ ஜெய்ப்பாங்க.. ப்ராட் ஹோக் கணிப்பு

ஒருவேளை அதையும் தாண்டி மழை பெய்தால் சூப்பர் 8 சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும் என்பது ஐசிசி விதிமுறையாகும். இந்த சூழ்நிலையில் கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி 60% இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இந்தியா – இங்கிலாந்து போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement