இந்த விதிமுறையை மாத்துங்க.. உங்களால் தான் அவங்க காணாம போறாங்க.. ஐசிசி’யை விமர்சித்த கம்பீர்

Gautam Gambhir 7
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக என்ற செய்திகள் காணப்படுகிறது. 2007, 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளார். மேலும் இந்த வருடம் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு அவர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார்.

அதனால் விரைவில் விடைபெறும் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக தோனி, விராட் கோலி போன்றவர்களை அடிக்கடி விமர்சிக்கக் கூடிய கௌதம் கம்பீர் எதையுமே தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவராக அறியப்படுகிறார். அந்த வரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்ற ஐசிசி விதிமுறையை கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ஐசிசி மீதே விமர்சனம்:
ஒருநாள் போட்டிகளில் ஐசிசி கொண்டு வந்துள்ள அந்த விதிமுறையாலேயே பவுலர்கள் அதிக சிரமத்தை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று கம்பீர் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மை என்பது என்ன என்று எனக்குத் தெரியவில்லை”

“ஏனெனில் அனைவரும் இங்கே நேர்மைத்தன்மைக்கு உட்பட்டு விளையாடுகின்றனர். எனவே விதிமுறைகளும் நேர்மைத் தன்மைக்கு உட்பட்டே இருக்க வேண்டும். ஆனால் 2 புதிய பந்துகளை பயன்படுத்தும் விதிமுறையை கண்டிப்பாக நான் மாற்ற விரும்புகிறேன். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அது விரல் ஸ்பின்னர்களுக்கு நியாயமற்றதாக அமைகிறது. விரல் ஸ்பின்னர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிகமாக அதிகம் விளையாடாதது அநியாயம்”

- Advertisement -

“ஏனெனில் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. இது சரியல்ல. தங்களுடைய நுணுக்கங்கள் அடிப்படையில் திறமையை காண்பிக்க அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே ஐசிசி வேலையாகும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட சில வீரர்களிடம் மட்டும் திறமையை பறிப்பது நியாயமற்றது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் விரல் ஸ்பின்னர்கள் விளையாடுவதை பார்ப்பது அரிதாக இருக்கிறது”

இதையும் படிங்க: தலைப்பு செய்தியில் வர விரும்பல.. சிறந்த கேப்டன் கங்குலியா? தோனியா? என்ற கேள்விக்கு கம்பீர் பதில்

“அதற்கான காரணம் என்ன? அதற்கு நீங்கள் அவர்களை குறை சொல்ல முடியாது. அதற்காக நீங்கள் ஐசிசி’யை தான் குறை சொல்ல வேண்டும். எனவே 2 புதிய பந்துகளை பயன்படுத்தும் விதிமுறையை அகற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அதை செய்தால் தான் பேட்டுக்கும் பந்துக்கும் சமமான போட்டி ஏற்படும்” என்று கூறினார்.

Advertisement