டி20 உலககோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி – பங்கேற்பது சந்தேகம்

Kohli
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி-யின் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 1-ஆம் தேதி துவங்கி ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து என மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

இந்த தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுடன் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை ஜூன் 5-ஆம் தேதி சந்தித்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரானது முடிவடைந்த கையேடு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்னதாக அமேரிக்கா சென்றடைந்தனர்.

- Advertisement -

அந்தவகையில் ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் நியூயார்க் சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் விராட் கோலி நேற்றிரவு தான் நியூயார்க் புறப்பட்டார். எனவே அவர் வங்கதேசம் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸில் இதான் வேலை செய்யும்.. இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் பற்றி கவாஸ்கர் ஆலோசனை

இருப்பினும் ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் லீக் போட்டியில் அவர் விளையாடுவார் என்று நம்பலாம். அதேபோன்று அந்த முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? கோலி எந்த வரிசையில் பேட்டிங் செய்வார் என்பது போன்ற பல கேள்விகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement