இந்தியாவில் நடைபெற்ற 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது முடிவடைந்த வேளையில் இன்னும் ஒரு சில தினங்களில் ஐசிசி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்திய அணி கோப்பையுடன் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியை சேர்ந்த வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதுதொடர்பான செய்திகள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
அந்த வகையில் கடந்த பல ஐ.சி.சி தொடர்களில் கோப்பை அருகில் வரை சென்று கோப்பையை தவற விட்டு வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலககோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மெதுவாக விளையாடியதால் என்றும் அந்த தவறினை இம்முறை செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த போட்டியின் போது இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 62 ரன்களை மட்டுமே குவித்தது. குறிப்பாக ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களையும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே அடித்தனர். இறுதிக்கட்டத்தில் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்டார்.
இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக கெளதம் கம்பீருக்கு தாதா கங்குலி எதிர்ப்பு? புதிய பதிவால் ரசிகர்கள் சந்தேகம்
திலிருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல வேண்டும். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் அதே போன்ற தவறை செய்யக்கூடாது. நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடினால் நிச்சயம் இந்திய அணியை விட சிறந்த அணி இருக்காது. இந்த முறை விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கூடவே ரோகித் சர்மாவும் அதிரடி காட்டினால் நிச்சயம் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



