WI vs BAN : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை எட்டி பிடித்த – ஷாகிப் அல் ஹசன்

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின

Shakib-2
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

WI vs BAN

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

அதன் பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Shakib

இந்த போட்டியில் 8 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 124 ரன்களையும் அடித்த சாகிப் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி அவர்படைத்த மிகப்பெரிய உலகசாதனை யாதெனில் மிகக்குறைந்த போட்டிகளில் அதாவது 202 போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Shakib 1

இந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது சாகிப் 6000 ரன்களை கடந்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு முறை 50+ ரன்களையும் சாகிப் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement