Virat Kohli : குல்தீப் யாதவ் மட்டுமல்ல இவரையும் அணியில் இருந்து கழட்டிவிட திட்டம் வைத்திருக்கும் – கோலி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறு

kuldeep1
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

Pakistan

- Advertisement -

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதிலும் குறிப்பாக ஏற்கனவே குல்தீப் யாதவ் அணியில் இருந்து வெளியேற்ற படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்த தொடரில் அவரது பந்து வீச்சு சுமாராக இருப்பதால் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஜடேஜாவை இறக்கினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இவருக்கு அடுத்து கேதார் ஜாதவ் அவரையும் அணியிலிருந்து தூக்கபோவதாகத் தெரிகிறது.

ஏனெனில் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய இந்திய அணி திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி ஷமி இன்றைய போட்டியில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாருடன் இணைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குல்தீப் யாதவ் மற்றும் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஷமி இறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement