England : ரூட் செயலினால் 4 நிமிடம் தடைபட்ட இங்கிலாந்து தென்னாப்பிரிக்க போட்டி – விவரம் இதோ

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமை

Root
- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

Eng

- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனபடி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

நேற்றைய போட்டியில் 20 ஓவரின் போது தென்னாப்பிரிக்க வீரர் அடித்த பந்து பவுண்டரி லைனை தாண்டி சிக்சருக்கு பறந்தது. இந்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த ரூட் எடுக்க சென்றார். மைதான மறைப்புக்கு பின் சென்ற ரூட் பந்தினை தேடிக்கொண்டிருந்தார். 4 நிமிடம் ஆகியும் பந்தை ரூட் வெளியே வரவில்லை.

england

அப்போது அம்பயர் உதவியுடன் மீண்டும் 4 நிமிடம் கழித்து ரூட் வெளியே வந்தார். வெளியே வந்த ரூட்டை பார்த்து சக அணி வீரர்களும், ரசிகர்களும் சிரித்தவண்ணம் இருந்தனர். இதனால் 4 நிமிடம் ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement