Worldcup : உலகக்கோப்பை தொடரில் இவரே அசுர வேகத்தில் பந்துவீசி எதிரணியை திணறவைப்பார் – பிரட் லீ கணிப்பு

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Lee
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவர் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் தனது அசுர வேக பந்து வீச்சின் மூலம் எதிரணிகளை திணறடிப்பார்.

bumrah 1

மேலும் அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மென்கள் பேட்டிங் செய்ய திணறுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர் பந்து வீசும் ஸ்டைல் மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்ட வடிவில் உள்ளது. மேலும் அவ்வாறு அவர் பந்துவீசும் போது பெரிய அளவிலான வேகத்தை கூட்டுகிறார் வேகத்தைக் கூட்டினாலும் அவர் பந்து வீசும் திசை சரியாக உள்ளது. எனவே அவர் இந்த உலக கோப்பை தொடரில் பிரகாசிப்பார் என்று பிரட் லீ கூறினார்

Advertisement