உடைமாற்றும் அறையின் கண்ணாடியை உடைத்தது இவர்தான் – வெளியான தகவல்

hassan
- Advertisement -

நடைபெற்று முடிந்த முத்தரப்பு தொடர் நிடாஸ்கோப்பையின் இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.அதற்கு முன்னதாக இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.

srilanka1

- Advertisement -

இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.இந்த லீக் போட்டியின் போது இருஅணி வீரர்களுக்கு கைகலப்பும்,வாக்குவாதமும் ஏற்பட்டது. அதிலும் உச்சகட்டமாக உடைமாற்றிடும் அறை கண்ணாடிகள் வங்கதேச வீரர்களால் அடித்து உடைக்கப்பட்டன.

19வது ஓவரை உதனா வீச முதல் இரண்டு பந்துகளும் முஷ்பிகூர் ரஹ்மானின் தலைக்கு மேலே எழும்ப இரண்டாவது பந்திற்கு லெக் அம்பயர் நோபால் சிக்னல் காண்பிக்க அதை கவனிக்காத நடுவர் நோ பால் தரமறுத்துவிட்டார்.

perara

இந்நிலையில் வங்கதேச வீரர்களுக்கு தண்ணீர் அளிக்க சென்ற மாற்றுவீரர் இலங்கை கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட மோதல் அதிகமாகி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் ஹல் அசேன் உடைமாற்றிடும் அறையிலிருந்து வெளியே வந்து மைதானத்தில் நின்று வீரர்களை விளையாடாமல் களத்திலிருந்து வெளியே வரச்சொல்லி ஒரு புறம் கத்திக்கொண்டிருந்த அதேவேளையில் மற்றொருபுறம் கோபத்தின் உச்சத்தில் வங்கதேச அணியினரால் உடைமாற்றிடும் அறை கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் உடைக்ப்பட்ட கண்ணாடிக்கான இழப்பீடை ஏற்றுக்கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் உடைமாற்றிடும் அறைக்கு அருகிலிருந்த உணவு பரிமாறிடும் ஊழியர்களிடம் அம்பயர் கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார்.

sakib

இந்த விசாரணையில் வங்கதேச அணியின் கேப்டன் தான் கோபமாக கண்ணாடியை தள்ளியதாகவும் அப்போது தான் அந்த கண்ணாடி உடைந்து சுக்குநூறானதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த காட்சிகளனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Advertisement