Virat Kohli : உ.கோ அணியில் 38 வயதான தோனியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து – கோலி பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

virat-kohli
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

MSdhoni

இந்நிலையில் இந்திய அணியில் தோனியை தேர்வு செய்தது குறித்து விராட் கோலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது : 38 வயதான தோனி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். நான் முதன் முதலில் இந்திய அணியில் இடம்பிடித்த போது எனக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியவர் தோனி மேலும், நான் 3 ஆவது வீரராக களமிறங்க உத்தரவிட்டவரும் தோனியே. தோனி மீது எனக்கு எப்போதும் விசுவாசம் உண்டு.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

தற்போது சிலர் தோனியை விமர்சித்து வருகிறார்கள் ஆனால், தோனி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் பல ஆண்டுகளாக இந்திய அணியை வழிநடத்தியவர். மேலும், இக்கட்டான சூழ்நிலையில் அவரின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் அந்த அனுபவத்தின் ரீதியிலும், அவரின் திறமையின் மீது உள்ள நம்பிக்கையிலும் அவரை அணியில் தேர்வு செய்தோம். மேலும், தற்போது உள்ள இந்திய அணி சிறப்பான அணியாகும். இந்த உலககோப்பையை வென்று சாதனை படைக்கும் என்றும் கோலி கூறினார்.

Advertisement