வரலாற்றில் இந்திய பெண்களை மனந்துகொண்ட 9 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்

Maxwell
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் எப்போதுமே இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் வகையில் விளையாடும் அணிகளாகும். ஆரம்பக் காலகட்டத்தில் ரொம்பவே தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் இந்தியா சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளையும் மிஞ்சும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு நம்பர் ஒன் அணியாக விளையாடி வருகிறது. அதனால் சில தருணங்களில் இந்தியாவைப் போல் விளையாட வேண்டும் என்று வெளிநாட்டு அணிகளும் நினைப்பதுண்டு.

அதிலும் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தங்களது நாட்டுக்கு விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வெளிப்படையாகவே பேசியுள்ளார்கள். அப்படி இந்தியாவின் மீது ஒரு தனித்துவமான ஈர்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் நிறைய தருணங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தால் மேலும் கவரப்படுகிறார்கள். அதனால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவை விரும்பும் நிலையில் தங்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது பெரும்பாலும் தங்களது நாட்டைச் சேர்ந்த பெண்ணை அல்லது காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதே வழக்கமாகும்.

- Advertisement -

இந்திய மாப்பிள்ளைகள்:
இருப்பினும் அரிதினும் அரிதாக ஒருசில வெளிநாட்டு வீரர்கள் தங்களது வாழ்க்கை துணையையும் தங்களுக்கு பிடித்த இந்திய திருநாட்டில் பிறந்த பெண்களால் கவரப்பட்டு அவர்களையே திருமணமும் செய்து கொண்ட வரலாறு உள்ளது. அந்த வகையில் வரலாற்றில் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்ட 9 நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை பற்றி பார்ப்போம்:

9. க்ளன் டர்னார்: 70களில் மிகச்சிறந்த நியூசிலாந்து பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர் இந்தியாவைச் சேர்ந்த சுகிந்தர் கௌர் என்னும் பெண்ணை கடந்த 1973இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உட்பட இரு குழந்தைகளும் உள்ளன.

- Advertisement -

8. மைக் ப்ரேர்லி: இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் மற்றும் கேப்டன்களில் ஒருவரான இவர் 70களில் இந்திய அளவில் புகழ்பெற்ற தொழில் அதிபராக இருந்த கவுதம் சாராபாய் அவர்களின் மகள் மானா சராபாயை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்கள்.

7. மோசின் கான்: முன்னாள் பாகிஸ்தான் வீரரான இவர் 80களில் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் புகழ்பெற்ற ரீனா ராயை கடந்த 1983இல் மணந்து கொண்டார். ஒருகட்டத்தில் தனது மனைவியுடன் ஒருசில பாலிவுட் படங்களிலும் நடித்த அவர் நாளடைவில் உறவு சரிவர அமையாத காரணத்தால் விவாகரத்து செய்துவிட்டார்.

- Advertisement -

6. ஜாஹீர் அப்பாஸ்: மற்றொரு முன்னாள் பிரபல பாகிஸ்தான் வீரரான இவர் கடந்த லண்டனில் ஒரு போட்டியின் போது இந்திய ரசிகையாக இருந்த ரிட்டா லுத்ராவை பார்த்து காதலில் மூழ்கினார். நாளடைவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி பாகிஸ்தானில் செட்டில் ஆகிவிட்டனர்.

5. ஹசன் அலி: பாகிஸ்தானின் தற்போதைய அணியில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றியவர்.

- Advertisement -

சமீயா அர்ஜோ எனும் பரிதாபாத் நகரைச் சேர்ந்த இந்திய குடும்பத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த அவர் கடந்த 2019இல் துபாயில் திருமணம் செய்து கொண்டார். அதனால் சில பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தாலும் 2 குழந்தைகளைப் பெற்றுள்ள இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறது.

4. ஷான் டைட்: முரட்டுத்தனமான வேகத்தில் பந்து வீசக்கூடிய இவர் கடந்த 2007 உலக கோப்பையை ஆஸ்திரேலிய வெல்ல முக்கிய பங்காற்றியவர். ஐபிஎல் தொடரிலும் விளையாடிய இவர் கடந்த 2013ல் மசூம் சிங்க எனும் இந்திய மாடல் அழகியை ஒரு வருடத்திற்கு மேல் காதலித்து இறுதியில் திருமணம் செய்து கொண்டார்.

தனது மனைவியுடன் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இவர் இந்தியாவில் குடியிருக்கும் வெளிநாட்டவருக்கான குடியுரிமையும் வாங்கியுள்ளார்.

3. சோயப் மாலிக்: கடந்த 2010இல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் காதலித்து கரம்பிடித்தது இரு நாட்டுக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹைதராபாத் நகரில் திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டிலாகியுள்ள இவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றபோது திருமண சீதனமாக வெற்றியை பரிசளித்து விட்டதாக ரசிகர்கள் பேசியதை மறக்க முடியாது.

2. முத்தையா முரளிதரன்: சர்வதேச கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழலால் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக உலக சாதனை படைத்துள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரபல மலர் மருத்துவமனையின் தலைவர் ராமமூர்த்தியின் மகளான மதிமலர் ராமமூர்த்தியை காதலித்து கடந்த 2005இல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் உள்ளது.

1. க்ளன் மேக்ஸ்வெல்: தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய சென்னை மாம்பலத்தை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த வினி ராமன் எனும் பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்தார்.

பெற்றோர்களது சம்மதத்தையும் பெற்ற இவர்களது திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு பாரம்பரிய தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்றது சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement