ஐபிஎல் 2023 : 3-வது கோப்பையை வெல்ல கொல்கத்தா தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

Shreyas-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 2014க்கு பின் 3-வது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த இளம் வீரரான ஷ்ரேயஸ் ஐயரை பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகளுடன் போட்டி போட்டு வெற்றிகரமாக வாங்கிய அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற அந்த அணி முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

KKR Shreyas Iyer

- Advertisement -

ஆனால் அதன்பின் ப்ளெயிங் லெவனில் அந்த அணி நிர்வாகம் செய்த தேவையற்ற மாற்றங்கள் வரிசையாக 5 தோல்விகளை பரிசளித்து இறுதியில் 7-வது இடத்திற்கு தள்ளியது. அணியை தேர்வு செய்வதில் சிஇஓ மற்றும் பயிற்சியாளர் தலையிடுவதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ஷ்ரேயஸ் ஐயர் உண்மையை உடைத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் போன்ற தக்க வைக்கப்பட்ட வீரர்கள் உட்பட நிறைய வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விகளை பரிசளித்தது. எனவே இந்த வருடம் மிகப்பெரிய பாடங்களை கற்றுள்ள அந்த அணி அடுத்த வருடம் கோப்பையை வெல்ல மீண்டும் போராட உள்ளது. அதற்கு தேர்வு விஷயத்தில் தலையிடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அந்த அணி நிர்வாகம் தக்கவைக்க வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. ஷ்ரேயஸ் ஐயர்: 12.25 கோடிக்கு வாங்கப்பட்டு 14 போட்டிகளில் 401 ரன்களை 136 என்ற ஓரளவு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த இவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் முடிந்த அளவுக்கு கொல்கத்தாவின் வெற்றிக்கு பாடுபட்டார்.

- Advertisement -

எனவே இவரை தக்கவைத்து நம்பிக்கையை வெறும் பெயரில் மட்டும் வைக்காமல் கேப்டனாக செயல்பட முழு சுதந்திரத்தை அளித்தால் நிச்சயம் அடுத்த வருடம் செயலில் சிறந்து காட்டுவார். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே வரலாற்றில் முதல் முறையாக டெல்லியை பைனலுக்கு (2019 சீசனில்) அழைத்துச் சென்ற பெருமை இவரைச் சேரும்.

2. ஆண்ட்ரே ரசல்: 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் இந்த வருடமும் வாங்கிய சம்பளத்துக்கு 14 போட்டிகளில் 335 ரன்களை 37.22 என்ற நல்ல சராசரியில் 174.48 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார்.

- Advertisement -

அதேபோல் பந்துவீச்சிலும் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டராக மீண்டும் நிரூபித்தார். எனவே இவரை கொஞ்சம் கூட தயங்காமல் அந்த அணி மீண்டும் தக்க வைக்க வேண்டும்.

Sunil Narine KKR

3. சுனில் நரேன்: 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் மட்டும்தான் கொல்கத்தாவின் பந்துவீச்சில் இந்த வருடம் முழுவதும் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் துல்லியமாக தனித்துவமாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்த வருடம் 14 போட்டிகளில் 9 விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 5.57 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்துவீசிய இவரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் வெளியே விடாமல் தக்க வைக்க வேண்டும்.

Umesh Yadav

4. உமேஷ் யாதவ்: சமீப காலங்களில் ரன்களை வாரி வழங்கிய இவரை 2 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா நிர்வாகம் ஆரம்பத்திலேயே நம்பி வாய்ப்பு வழங்கியது.

அதில் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 7.06 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்து பந்துவீச்சில் அசத்திய இவர் 2018க்கு பின் இந்த வருடம் மிகச் சிறப்பாக பந்து வீசினார். எனவே பார்முக்கு திரும்பியுள்ள இவரையும் இதே குறைந்த விலையில் அடுத்த வருடம் கொல்கத்தா தக்க வைக்கலாம்.

Nitish Rana

5. நிதிஷ் ராணா: சமீப காலங்களில் கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் இவர் இந்த வருடம் 14 இன்னிங்சில் 361 ரன்களை 143 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு செயல்படவில்லை.

இருப்பினும் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் வேறு தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் இவரை தக்கவைத்தால் அடுத்த வருடம் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

KKR vs SRH Tim Southee

6. டிம் சௌதீ: நியூசிலாந்தின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இவர் 1.50 கோடிக்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 7.86 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டார்.

எனவே இவரையும் விட்டால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு மோசமாகி விடும் என்பதால் கொல்கத்தா நிர்வாகம் இவரை தக்க வைத்தால் நல்ல முடிவாக இருக்கும்.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

சந்தேக பட்டியல்:
1. பட் கமின்ஸ்: கடந்த வருடம் 15.50 கோடிக்கு அதிகப்படியான தொகையில் விளையாடிய இவர் இந்த வருடம் 7.25 கோடிக்கு என்ற நல்ல தொகையில் விளையாடி 5 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்தாலும் 10.69 என்ற அதிகப்படியான எக்கனாமியில் வீசினார். இருப்பினும் பேட்டிங்கில் மும்பைக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து தனி ஒருவனாக வெற்றிபெற வைத்தார்.

இந்த வருடம் 5 போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் தடுமாறினாலும் ஒருசில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். சர்வதேச அளவில் உலகத்தரம் வாய்ந்த வீரரான இவரை மீண்டும் அடுத்த வருடம் சற்று குறைவான தொகையில் தக்க வைத்து முழு வாய்ப்பளித்து பார்க்கலாம்.

Rinku Singh

2. ரிங்கு சிங்: 55 லட்சத்துக்கு வாங்கி இவரின் ஏழ்மையை போக்கிய கொல்கத்தா நிர்வாகம் இந்த வருடம் கடைசி 7 போட்டிகளில் வாய்ப்பளித்தது. அதில் 174 ரன்களை 34.80 என்ற சராசரியில் எடுத்த இவர் கடைசி ஒருசில போட்டிகளில் கொல்கதாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

குறிப்பாக லக்னோவுக்கு எதிராக கடைசி ஓவரில் போராடிய இளம் வீரரான இவரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டிய நிலையில் அடுத்த வருடம் மீண்டும் தக்கவைத்து முழு வாய்ப்பளிக்கலாம்.

Advertisement