முயற்சித்திருந்தால் சிறந்த பேட்ஸ்மேன்களாக வந்திருக்கக் கூடிய 7 இந்திய வீரர்களின் பட்டியல்

Ashwin
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளூர் அளவில் பயணத்தை தொடங்குவார்கள். மேலும் கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்-ரவுண்டர் என 3 வகையான பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தங்களது பயணத்தை துவக்கும் அவர்கள் அதில் தேவையான யுத்திகளை கற்று சிறந்து விளங்கி சர்வதேச அளவில் சாதனை படைப்பார்கள். குறிப்பாக பவுலிங் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்குள் பேட்டிங் துறையில் தேவையான பயிற்சி செய்தால் சிறந்து விளங்கும் திறமையும் ஒளிந்திருக்கும்.

Bumrah

- Advertisement -

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்களாக பெயர் பெற்ற சில வீரர்கள் தேவையான பேட்டிங் பயிற்சிகளை செய்திருந்தால் சிறந்த பேட்ஸ்மேன்களாக வந்திருப்பார்கள் என சொல்லும் அளவுக்கு பேட்டிங் திறமையும் கொண்டிருந்ததை பற்றி பார்ப்போம்:

7. பியூஸ் சாவ்லா: 2011 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த லெக் ஸ்பின்னரான இவர் இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளூர் கிரிக்கெட்டில் 31 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அதிலும் கடந்த 2014இல் ஐபிஎல் தொடரின் பைனலில் அதிரடியான சிக்சரை பறக்க விட்டு செய்த பினிசிங் இவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

thakur 1

6. ஷார்துல் தாகூர்: சமீப காலங்களில் 3 வகையான இந்திய அணியிலும் ஆல்-ரவுண்டராக அறிமுகமாகி வெற்றிகளில் பங்காற்றி வரும் இவர் 2021இல் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியில் அரை சதமடித்து முக்கிய பங்காற்றியதும் லண்டன் ஓவல் மைதானத்தில் மற்றுமொரு அதிரடியான அரை சதமடித்து முக்கிய பங்காற்றியதும் அவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

அப்போது அவருடைய கவர் டிரைவ் அடிக்கும் ஸ்டைல் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் வாக் போல இருப்பதாக மைக் ஹசி ஏற்கனவே பாராட்டியிருந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் போல ஸ்டைர்ய்ட் ட்ரைவ் கச்சிதமாக அடிக்கிறார் என்று இந்திய ரசிகர்கள் பாராட்டியதை பார்க்க முடிந்தது. ரசிகர்களால் லார்ட் என கொண்டாடப்படும் இவர் இயற்கையாகவே பேட்டிங் திறமை கொண்டிருப்பதால் அதில் இன்னும் உழைத்தால் இன்னும் சாதனைகளைப் படைக்கலாம்.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

5. புவனேஷ்வர் குமார்: பவர் பிளே ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக அழைக்கப்படும் இவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தோனியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையில் 224 ரன்கள் விளாசிய போதும் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து த்ன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட்டில் ஏற்கனவே சதமடித்துள்ள இவர் சவாலாக அமைந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 அரை சதங்களை அடித்து அசத்தினார். அதனால் சீனியராக விளையாடி வரும் இவரை அணி நிர்வாகம் இப்போதும் ஒரு லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

kumble

4. அனில் கும்ப்ளே: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவான் பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 6 சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் கடந்த 2007இல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் அவர் விளாசிய யாராலும் மறக்க முடியாத சதம் அவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் நல்ல பயிற்சிகள் எடுத்திருந்தால் பேட்டிங் போல பந்துவீச்சு துறையிலும் இவர் இந்தியாவின் ஜாம்பவனாக வந்திருப்பார்.

3. ஹர்பஜன் சிங்: இந்தியாவின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான இவரும் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றவர். குறிப்பாக 2011இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்களை விளாசிய அவர் ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் அதிரடியாக ரன்களை குவித்ததை மறக்க முடியாது.

2. அஜித் அகர்கர்: இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான இவர் சச்சின் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களை உருவாக்கிய மும்பை இரத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் சச்சினால் முடியாத லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதமடித்த பெருமைக்குரியவர்.

agarkar

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரராக இப்போதும் சாதனை படைத்துள்ள அவர் பேட்டிங் துறையில் விரும்பி பயிற்சிகளை எடுத்திருந்தால் நிச்சயம் பெரிய அளவில் வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

1. ரவிச்சந்திரன் அஷ்வின்: தமிழகம் கண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படும் இவர் பந்து வீச்சில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக விக்கெட்டுகளையும் சாதனைகளையும் படைத்து வருகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் தொடக்க வீரராக தனது கேரியரை துவக்கிய அவர் கும்ப்ளேவையும் மிஞ்சும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 5 சதங்களை விளாசி தற்சமயத்தில் உலகின் நம்பர் 2 டெஸ்ட் ஆல்-ரவுண்டராக இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கிறார்.

ashwin bat

சமீபத்திய ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் டாப் ஆர்டரில் ஜோஸ் பட்லருடன் களமிறங்கி கேரியரில் முதல் முறையாக அரை சதமடித்த அவர் விரும்பி பேட்டிங் பயிற்சிகளை எடுத்தால் நிச்சயம் தரமான பேட்ஸ்மேனாக வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement