- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது என்ன குஜராத் டைட்டன்ஸ் டெஸ்ட் டீமா? சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மே 6-ஆம் தேதியான இன்று முள்ளான்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இது என்ன குஜராத் டைட்டன்ஸ் டெஸ்ட் அணியா? : ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் அறிமுக வீரராக மானவ் சுதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இன்றி இந்திய டெஸ்ட் அணி இருந்தது. இருந்தாலும் இந்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தனது ஆதிக்கத்தை இந்த போட்டியில் செலுத்துகிறாரோ? என்ற வகையில் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் 7 குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று இன்றைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 6 குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் என ஆறு வீரர்களுக்கு வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது இந்திய டெஸ்ட் அணியா? அல்லது குஜராத் டைட்டன்ஸ் டெஸ்ட் அணியா? என்று விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் 15 ஆண்டுகளில் இல்லாத அரிதான நிகழ்வு.. ஒரு வீரருக்கு அறிமுக வாய்ப்பு – விவரம் இதோ

இந்திய அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் தனக்கு தேவையான வீரர்களை அணியில் சேர்க்கிறாரோ? என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -