கிரிக்கெட் தவிர்த்து சமையல் கலையிலும் அசத்தும் திறமை பெற்றுள்ள 6 வீரர்கள் – வித்யாச பதிவு

Raina
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் தேவையான யுக்திகளை கற்றுக்கொண்டு கடினமாக உழைத்து கடுமையாகப் போராடி பெறும் வாய்ப்பில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஜாம்பவான்களாகவும் ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திரங்களாகவும் உருவெடுப்பார்கள். அப்படி கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தற்போது இருக்கும் துறையை போலவே மற்றுமொரு துறையில் சிறந்து விளங்கும் திறமையும் இருக்கும் என்பார்கள்.

அதிலும் குறிப்பாக வாழ்வதற்கு அத்தியாவசியமான உணவுகளை செய்யும் சமையல் கலையில் சில வீரர்கள் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் நம்மில் பலர் குறைந்தபட்சம் தோசையை செய்யும் திறமையை பெற்றிருப்போம். ஆனாலும் நம் அன்னையை போல பாட்டியைப் போல வீட்டிற்குள் நுழையும் போதே மூக்கை துளைக்கும் நறுமணத்துடன் அறுசுவையுடன் கூடிய சமையலை செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அந்த வகையில் இயற்கையாகவே சமையல் கலையில் திறமை பெற்று அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் அதை செய்து அசத்தும் சில வீரர்கள் கிரிக்கெட் போலவே முழுமையான பயிற்சி எடுத்திருந்தால் நல்ல சமையல் கலைஞர்களாக வந்திருப்பார்கள். அது போன்ற வீரர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. அஜிங்கிய ரகானே: பொறுமையான குணத்தை கொண்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்து 2021இல் காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்தார்.

அந்த தொடருக்கு முன்பாக நிலவிய லாக்-டவுன் சமயத்தில் தனது சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்ற அவர் “கொரியண்டர் ரைஸ்” எனும் உணவை சமைத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது மிகவும் சுவையாக இருந்ததாக தெரிவித்த அவருடைய மனைவி ராதிகா பேசாமல் தினமும் இனிமேல் நீங்களே சமைத்து விடுங்கள் என்று கலகலப்புடன் பதிலளித்திருந்தார்.

- Advertisement -

5. ஹர்பஜன் சிங்: இந்தியாவின் திறமையான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவரும் 2020 லாக்-டவுன் சமயத்தில் தனது அம்மாவுடன் இணைந்து சமையல் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதிலும் மாஸ்டர் செஃப் என்று தனக்கு தானே தன்னம்பிக்கை பட்டத்தை கொடுத்து “உருளைக்கிழங்கு கோபி” போன்ற பிரபல வட இந்திய உணவுகளை சமைத்த அவர் ரசிகர்களை அசத்தினார்.

4. ஸ்டீபன் பிளெமிங்: நியூசிலாந்தின் ஜாம்பவான் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் ஓய்வுக்குப்பின் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை தோனி உட்பட அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் அவர் எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற கலையையும் கற்றுள்ளார்.

- Advertisement -

அதற்கு எடுத்துக்காட்டாக 2020 சீசனில் ஃசெப்பாக மாறி உதவிக்கு ஹர்பஜன் சிங் போன்ற சில வீரர்களையும் வைத்துக்கொண்டு மொத்த சென்னை அணிக்கும் தேவையான சமையல் செய்து அவர் விருந்து படைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

3. சுரேஷ் ரெய்னா: இந்தியாவின் ஸ்டைலிஷ் இடதுகை பேட்ஸ்மேனான இவர் வரலாற்றின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். கடந்த 2020இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் சமையலில் இருக்கும் தனது ஆர்வத்தை கடந்த பிப்ரவரியில் கிடைத்த ஒரு வாய்ப்பில் பாரம்பரியமான முறையில் மண்பானையில் சமைப்பதை நேரடியாக வீடியோவாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

2. குமார் சங்கக்காரா: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்த இலங்கையின் ஜாம்பவானான இவர் இடதுகை பேட்ஸ்மேன்கள் எப்படி மிகச் சரியாக கவர் டிரைவ் அடிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர். அந்தளவுக்கு கச்சிதமாக விளையாடக்கூடிய அவர் சமையல் துறையிலும் நல்ல கைபக்குவம் கொண்டவர்.

குறிப்பாக 2020இல் இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது இலங்கையின் பிரபல “பொல் சம்போல்” உணவை பாரம்பரிய முறைப்படி அம்மியில் தேவையான மசாலா அரைத்து செய்த அவர் ரசிகர்களுக்கு புகைப்படத்திலேயே விருந்து படைத்தார்.

1. சச்சின் டெண்டுல்கர்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்த இந்தியாவின் மகத்தான ஜாம்பவானான இவர் உணவு பிரியர் ஆவார்.

அதிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேராக தன்னுடைய வீட்டு சமையலறைக்கு சென்று தனது கைப் பக்குவத்தை சோதிப்பதற்காக விதவிதமான சமையலை செய்யும் அவர் அதை வீடியோவாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advertisement