- Advertisement -
உலக கிரிக்கெட்

Ashes 2023 : அனல் பறந்த ஆஷஸ் தொடர் – 95 வருட தனித்துவ சாதனையை உடைத்து புதிய உலக சாதனையுடன் நிறைவு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வந்த வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரபரப்பாக நடைபெற்று 2 – 2 (5) என்ற கணக்கில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிந்துள்ளது. பரம எதிரிகளாக பாவிக்கப்படும் இவ்விரு நாடுகளுக்கு கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக மிகப்பெரிய கௌரவமாக இருந்து வரும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலை குனியும் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளானது.

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் கொதித்தெழுந்து 3வது போட்டியில் போராடி வென்ற இங்கிலாந்தின் வெற்றியை 4வது போட்டியில் மழை வந்து தடுத்ததால் டிராவில் முடிந்தது. அதனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்தது. அதனால் மீண்டும் பின்னடைவுக்குள்ளான என்று தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜூலை 27ஆம் தேதி லண்டனில் துவங்கிய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

உலக சாதனையுடன் நிறைவு:
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து போராடி 395 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்களை சாய்த்தார்.

இறுதியில் வார்னர் 60, கவாஜா 72 என தொடக்க வீரர்கள் பெரிய ரன்கள் குவித்து 140 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்சிப் அமைத்ததால் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் லபுஸ்ஷேன் 13, ஸ்டீவ் ஸ்மித் 54, டிராவிஸ் ஹெட் 43, மிட்சேல் மார்ஷ் 6, அலெக்ஸ் கேரி 28 என முக்கிய வீரர்கள் அனைவரையும் அனலாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 334 ரன்களுக்கு சுருட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதன் காரணமாக இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் 2001க்குப்பின் 22 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தைக் காப்பாற்றிய இங்கிலாந்து அவமானத்திலிருந்து தப்பி தொடரை சமன் செய்தது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரின் கடைசி போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களில் யாருமே ஒரு சதம் கூட அடிக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85, ஜோ ரூட் 91, ஜானி பேர்ஸ்டோ 78, ஜாக் கிராவ்லி 73 என முக்கிய வீரர்கள் அரை சதம் கடந்த போதிலும் 3 இலக்க ரன்களை தொடவில்லை.

அதே போலவே ஆஸ்திரேலியா சார்பிலும் ஸ்டீவ் ஸ்மித் 71, 54, டேவிட் வார்னர் 60, உஸ்மான் கவாஜா 72 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அரை சதமடித்த போதிலும் சதத்தை நெருங்க முடியவில்லை. ஆனாலும் எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் முடிந்தளவுக்கு தங்களால் முடிந்த ரன்களை பேட்டிங்கில் எடுத்ததால் இப்போட்டியில் இரு அணிகளும் 4 இன்னிங்சிலும் சேர்ந்து 283, 395, 195, 334 என மொத்தமாக 1307 ரன்கள் குவித்தன. இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனும் சதமடிக்காமலேயே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையை இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த 5வது டெஸ்ட் போட்டி படைத்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : மீண்டும் பெய்ல்ஸை மாற்றி மேஜிக் விக்கெட்டை எடுத்த ப்ராட் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையுடன் ஓய்வு

அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா : 1307 ரன்கள், ஓவல், 2023*
2. தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து : 1272 ரன்கள், டர்பன், 1272
3. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா : 1262 ரன்கள், நாட்டிங்கம், 1997
4. ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் : 1227 ரன்கள், மேல்போர்ன், 1961
5. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா : 1225 ரன்கள், 1993

- Advertisement -
Published by