அடுத்த 10 வருடங்களுக்கு கிரிக்கெட்டை கட்டி ஆளப்போகும் 5 இளம்வீரர்கள் இவர்கள்தான் – பட்டியல் இதோ

Marnus
- Advertisement -

தற்போது கிரிக்கெட் உலகத்தை கட்டி ஆண்டு கொண்டிருக்கும், விராட் கோலி ஸ்டீவ், ஸ்மித் கேன், வில்லியம்சன், ஜோ ரூட் போன்றோர் கிட்டத்தட்ட 30 வயதை தாண்டி விட்டார்கள். இன்னும் 5 முதல் 6 வருடங்கள் அவர்களால் துடிப்பாக ஆட முடியும். அதனைத்தொடர்ந்து அடுத்த ஜெனரேஷன் கிரிக்கெட் வீரர்கள் வர துவங்கி விடுவார்கள். தற்போது அவர்களது துணுக்கு வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பாகிஸ்தானிலும், ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும், இங்கிலாந்திலும் அந்த வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட 5 வீரர்களை தற்போது பார்ப்போம்.

Archer

- Advertisement -

ஜோஃப்ரா ஆர்ச்சர் :

வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த இவர் அந்த நாட்டில் இடம் கிடைக்காமல் இங்கிலாந்து அணிக்காக ஆடி இங்கிலாந்து அணியிலும் இடம் பிடித்துவிட்டார். வேகப்பந்து வீச்சில் அதிக திறமை வாய்ந்தவர் ஆக்ரோஷமான வேகம், அற்புதமான ஸ்விங் மற்றும் தெளிவான துல்லியத் தன்மை என பல திறமையை கையில் வைத்திருக்கிறார். முன்னாள் வீரர்கள் பலரும் இவரை பாராட்டி வந்து கொண்டிருக்கின்றனர். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது விதிகளை தளர்த்தி ஒரு வருடம் முன்னதாகவே உலக கோப்பை தொடரில் ஆட வைத்திருக்கிறது. தற்போது 25 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து விட்டார் அடுத்த பத்து வருடங்கள் சர்வதேச அளவில் இவர் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பாபர் அசாம் :

- Advertisement -

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் ஆவார். அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு கொண்டிருக்கிறார். 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 26 டெஸ்ட் போட்டிகளில் 1750 ரன்களும், 74 ஒருநாள் போட்டிகளில் 3359 ரன்களும், 38 டி20 போட்டிகளில் 1471 ரன்கள் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும் 41 அரை சதங்களும் அடங்கும். தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது அடுத்த 10 வருடத்தில் இவர் பேட்ஸ்மேன் ஜாம்பவானாக கூட மாற வாய்ப்பிருக்கிறது.

Kuldeep-1

குல்தீப் யாதவ் :

- Advertisement -

தற்போது உலகில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெயரை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகியோர் தான் தற்போது மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து வரும் காலங்களில் ஜொலிக்கப் போகும் வீரர்களில் ஒருவர் தற்போது வரை இவர் 100 சர்வதேச ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவருக்கு தற்போது 25 வயதுதான் ஆகிறது. வெகு சீக்கிரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை இவர் பிடிக்க போவது எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

மார்னஸ் லபுஷானே :

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு திடீர் திடீரென வந்து விளையாடி இங்கிலாந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். ஸ்டீவன் ஸ்மித் அடிபட்டவுடன் சப்ஸ்டியுட் வீரராக வந்து இறங்கி முதல் ஆஷஸ் தொடரிலேயே 350 ரன்கள் விளாசினார். ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். இவருக்கு தற்போது 26 வயது தான் ஆகிறது. 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி ஆயிரத்து 459 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 73.4 ஆகும் அதிகபட்சமாக 215 ரன்கள் குவித்துள்ளார். 4 சதங்களும் 8 அரை சதங்களும் இதில் அடங்கும்.

Pooran

நிக்கோலஸ் பூரன் :

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திறமை வாய்ந்த வீரர் இவர். தனது 16 வயதில் இருந்தே கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ஆடிக் கொண்டிருக்கிறார்.. தற்போது வரை 25 ஒருநாள் போட்டிகளில் ஆடி 932 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதமும் ஏழு அரை சதம் விளாசியுள்ளார். 20 போட்டிகளில் ஆடி 353 ரன்களும் எடுத்துள்ளார் இவரும் எதிர்கால கிரிக்கெட்டின் சொத்து என்றே கருதப்படுகிறார்.

Advertisement