டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : 2008 U19 உலககோப்பையில் விளையாடி தற்போது மோதிக்கொள்ள இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

kohli-vs-kane
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் மோதவிருக்கின்றன. மேலும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடிய ஐந்து வீரர்கள் இந்த இறுதிப் போட்டியிலும் விளையாட இருக்கின்றனர் என்பது இந்த தொடரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அந்த ஐந்து வீரர்கள் யார் என்பதை இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

kohli u19

- Advertisement -

விராட் கோஹ்லி:

2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை வழிநடத்திச் சென்று கோப்பையை கைப்பற்றி கொடுத்த விராட் கோஹ்லிதான், இந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் செல்லவிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஒரு கேப்டனாக செயல்பட்டு ஐசிசி நடத்திய தொடர்களில் கோப்பையை இந்திய அணிக்காக அவர் பெற்றுத் தரவில்லை. இந்த இறுதிப் போட்டியை வென்று அந்த விமர்ச்சனத்திற்கு விராட் கோஹ்லி முற்றுப் புள்ளி வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

boult

ட்ரென்ட் போல்ட்:

- Advertisement -

இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக ட்ரெண்ட் போல்ட் கருதப்படுகிறார். இந்த தொடரில் அவர் இதுவரை 34 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலக கோப்பை தொடரிலும் இவர் நியூசிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

southee

டிம் சவுதி:

- Advertisement -

2008 – யு19 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்த இவர், அதற்குப் பிறகு அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியிலில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து கொண்டார். இந்த இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லிக்கு அதிக தொந்தரவு கொடுக்கும் பந்து வீச்சாளராக இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் என அனைத்திலும் விராட் கோஹ்லியின் விக்கெட்டை இவர் பல முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jadeja u19

ரவீந்திர ஜடேஜா:

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக ரவீந்திர ஜடேஜா இருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. பவுலிங்கில மட்டுமில்லாமல் சமீப காலமகவே தன்னுடைய பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த தொடரில் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்போதோடு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இவரும் விராட் கோஹ்லியும் 2008 யு19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.

williamson

கேன் வில்லியம்சன்:

விராட் கோஹ்லியைப் போலவே 2008 – யு19 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திச் சென்றவர்தான் கேன் வில்லியம்சன். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற இவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்து அசத்தியிருக்கிறார். விராட் கோஹ்லி கேன் வில்லியம்சன் என இருவரும் இதுவரை ஐசிசி நடத்திய தொடர்களில் கோப்பையை வென்றதில்லை என்பதால், இந்த இறுதிப் போட்டியில் இருவரின் ஆட்டமும் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Advertisement