மும்பை அணியில் இருந்தும்…ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 அதிரடி வீரர்கள்..!

- Advertisement -

நடந்து முடிந்த 10 ஐபில் தொடர்களில் இதுவரை 3 முறை கோபையை வென்ற ஒரே அணி எது என்றால் அது மும்பை அணி மட்டும் தான். ஆனால் தற்போது 11 வது சீசனில் ஆடிவரும் மும்பை அணி பிலே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெற முடியமால் தடுமாறி வருகின்றது. இதுவரை நடந்து முடிந்த ஐபில் தொடர்களில் மும்பை அணியில் இடம்பெற்று ஒரு போட்டிகளில் கூட ஆடாத டாப் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

kuldeep

- Advertisement -

1. குலதீப் யாதவ் :-
தற்போது கொல்கத்தா அணியின் சூழல் பந்து வீச்சாளராக இருந்து வரும் இவர் ஏற்கனவே இரன்டு ஐபில் தொடர்களில் ஆடியுள்ளார். அதிலும் 2012 ஆம் ஆண்டு ஐபில் தொடரில் மும்பை அணியில் இருந்த இவர் கடைசி வரை பௌண்டரி கோட்டிற்கு வெளியில் அமர்ந்து அணைத்து போட்டிகளையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

2. அக்சர் பட்டேல் :-

patel

குஜராத் அணியில் சிறப்பாக ஆடியதன் மூலம் இவர் 2013 இல் நடைபெற்ற ஐபில் தொடரில் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மும்பை அணியில் ஹர்பஜன் மற்றும் ஓஜா இருந்ததால் இவரின் உதவி அந்த அணிக்கு தேவை படவில்லை அதனால் இவருக்கு ஒரு போட்டிகளில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

3. அலெக்ஸ் ஹேல்ஸ் :-

hales

இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவர் தற்போது ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.2015 மும்பை அணியில் ஆடிய இவரும் அந்த ஆண்டில் எந்த ஒரு போட்டியிலும் ஆடவில்லை. மேலும் அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு ஐபில் தொடரிலும் எந்த ஒரு அணியும் ஏலம் எடுக்கவில்லை.

4. கோளின் முன்ரோ:-

munro
கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூஸிலாந்து அணியின் சிறந்த டி20 ஆட்டக்காரராக இருந்து வருகிறார். மேலும் டி20 போட்டிகளில் இதுவரை மூன்று முறை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும், உடையவர். ஆனால் இவர் 2015 மும்பை அணியில் விளையாடிய போது அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் இருந்ததால் வீரர்கள் இருந்ததால் இவரை நம்பாமல் ஒரு போட்டிலும் இவரை களத்தில் இரக்கவில்லை.

5. மோய்சஸ் ஹென்ரிக் :-

hendrics
ஆஸ்திரேலிய ஆள் ரௌண்டரான இவர் 2009 இல் கொல்கத்தா அணியில் தனது ஐபில் பயணத்தை ஆரம்பித்தார் அதற்கு பின்னர் 2011 இல் மும்பை ஆனால் ஏலமெடுக்கபட்டார். இருப்பினும் இவருக்கும் மற்ற வீரர்கள் நிலை தான் கடைசி வரை இருக்கையை தேய்த்துவிட்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டார். மேலும் இந்த ஐபில் ஏலத்திலும் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

Advertisement