சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் அசைக்க முடியாத 5 சாதனைகள் – லிஸ்ட் இதோ

dhonii

தல தோனி என்றாலே சாதனைகள்தான். ஒரு கேப்டனாக இவர் படைத்த சாதனைகள் ஏராளம். தற்போது வரை இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இவர்தான். நேற்று தனது ஓய்வை அறிவித்து விட்டார். இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும் 350 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி அசத்தியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். அப்படி யாரும் முறியடிக்க முடியாத சாதனைகளின் பட்டியல் தற்போது பார்ப்போம்.

2007 t20 worldcup

3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி :

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டி20 உலகக்கோப்பை 2007, ஒரு நாள் உலக கோப்பை 2011, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2013 ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றிருக்கிறார். இதனை வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

அதிக சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே கேப்டன்

இந்திய அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளிலும், 60 டெஸ்ட் போட்டிகளிலும், 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து இருக்கிறார். மொத்தம் 332 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்து இருக்கிறார். ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

- Advertisement -

Dhoni

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பட்சமான நாட் அவுட் :

350 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி 84 மூறைஆட்டமிழக்காமல் நாட் அவுட்டாக இருந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இறுதிப் போட்டிகளில் வென்ற ஒரே கேப்டன் :

பல நாடுகள் கலந்துகொண்ட தொடர் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்த தோனி. நான்கு இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான ஸ்டம்பிங் :

தோனி ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் 123 ஸ்டம்பிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 ஸ்டம்பிங் டி20 கிரிக்கெட்டில் 34 ஸ்டம்பிங் என மொத்தமாக சேர்த்து 195 ஸ்டம்பிங் செய்திருக்கிறார் தோனி.